Latest Stories
தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன் வேரும் இலையும் கைப்பு (கசப்பு), கார்ப்பு சுவையுடையது. தூதுவளையை சமைத்துச் சாப்பிட கபத்தால் உண்டாகும் காதுமந்தம், காதெழுச்சி, காசம், நமைச்சல், அக்னி மாந்தம், தேக உட்குத்தல், விந்து நட்டம் ஆகியவை நீங்கும். இலையை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பின்பு மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக...
Learn moreசிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க கூடியதும், ரத்த சோகையை சரிசெய்ய கூடியதும், மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட சக்கரவர்த்தி கீரையை பற்றி நாம் இன்று பார்ப்போம்.கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. வாத்தினுடைய காலின் அமைப்பை உடைய சக்கரவர்த்தி கீரையை, பருப்பு கீரை என்று சொல்வதுண்டு. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த கீரையில்...
Learn moreகீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும். வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும். முளைக்கீரையை விதைத்த பின்னர் 45 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு மேல் வளர விட்டால் கீரை முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். உண்ணுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் முளைக்கீரையும் ஒன்று. முளைக்கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கிறது. நல்ல மலமிளக்கியாகவும் அது விளங்குகிறது....
Learn moreமணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக் கீரையின் பயன்கள் : மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட வேண்டும். மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு...
Learn moreமுடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. முடக்கத்தான் கீரையை வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத்தோடு கூட்டாகப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம். துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும்,...
Learn moreஅரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை என பெயர் உண்டாயிற்று. அறுகீரையானது சத்து நிறைந்த கீரைகளில் ஒன்றாகும். இக்கீரைக்கு அரக்கீரை, அறுகீரை, அறைக்கீரை, கிள்ளுக்கீரை, அரைக்கீரை என்ற வேறு பெயர்களும் உண்டு. செடியிலிருந்து கீரையைப் பலமுறை அறுவடை செய்து பயன்படுத்துவதால் அறுப்புக்கீரை என்னும் பெயரும் இக்கீரைக்கு வழங்கி வருகிறது. இக்கீரை, கிளைவிட்டு வளரக் கூடியது. செங்குத்தாக நிற்கும் தன்மை பெற்றது. இது தண்டுக் கீரை இனத்தைச் சார்ந்த...
Learn moreகொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது. தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். கொடியில் அல்லாமல் தரையில் படரும் பசலையும் உண்டு. இது தரைப் பசலைக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கீரைக்கும் ஒரே பலன்தான். இக்கீரை அதிக குளிர்ச்சித் தன்மை உடையது. எனவே குளிர்ச்சித் தேகம் கொண்டவர்கள் அதிகம் உண்ணக்கூடாது. கபம் கட்டும். கொடி பசலைக் கீரையின் பயன்கள் : இக்கீரையை நன்றாக...
Learn moreமாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளை பழங்களில் இரும்பு(Iron), சர்க்கரை சுண்ணாம்பு(Calcium), பாஸ்பரஸ (Phosphorous) மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் (Medicinal Value) அடங்கிய மருந்தாகவும் உள்ளது. மேலும் இந்த மாதுளம் பழத்தில் கூந்தல் மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிகவும் அதிகமாக உள்ளன. ஊட்டச்சத்துக்கள்(Nutrients): புரதச்சத்து(Protein)...
Learn moreதக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients): தக்காளியில் விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்)(Vitamin), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுக்கள் (Folic acid),தாதுஉப்புக்களான (Mineral salts),கால்சியம் (Calcium), மெக்னீசியம் (Magnesium), மாங்கனீசு(Manganese), பாஸ்பரஸ் (Phosphorus), துத்தநாகம்(Zinc), இரும்புச்சத்து(Iron), பொட்டாசியம் (Potassium), கார்போஹைட்ரேட்டுகள்(Carbohydrate), புரோடீன்கள் (Proteins), நார்சத்து (Fiber) போன்றவைகள் காணப்படுகின்றன. நுண்ஊட்டச்சத்துக்களான (Micro nutrients) பீட்டா கரோடீன் (Beta Carotene), ஆல்பா கரோடீன் (Alpha Carotene), லைக்கோபீன் (Lycopene), லுடீன் ஸீக்ஸாத்தைன் போன்றவை காணப்படுகின்றன. தக்காளி சாற்றின் பயன்கள்(Benefits) :...
Learn moreஎலுமிச்சை சாறில் உள்ள ஊட்டச்சத்து(Nutrients): எலுமிச்சை எல்லா காலங்களிலும் கிடைக்கும். எலுமிச்சை சாறு உள்ள கனிமங்கள் பொட்டாசியம்(Potassium)-142 மிகி, கால்சியம்(Calcium)-38 மிகி, பாஸ்பரஸ் (Phosphorus)- 18 மிகி, குளோரைடு(Chloride)-5 மிகி உள்ளன. குறைவான அளவு இரும்பு(Iron), மாங்கனீசு(Manganese), போரான்(Boron), ஃப்ளோரின்(Fluorine), சல்பர்(Sulphur), தாமிரம்(Copper), மாலிப்டினம்(Molybdenum) மற்றும் துத்தநாகம்(Zinc). எலுமிச்சைச் சாறு பயன்கள்(Benefits): வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன்(Honey) அல்லது நெல்லிக்காய் சாறு (Amla Juice) அருந்துவது உடலுக்கு மிக நல்லது. இவற்றில் உள்ள வைட்டமின் “சி’,...
Learn more
Login with