Tag: மருத்துவ தாவரங்கள்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

சங்குப்பூ

சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது....

Learn more

பொடுதலை

பொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்; கோழை அகற்றும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும். பொடுதலை வீக்கத்தைக் கரைக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; சீதக் கழிச்சல், இருமல், வெள்ளை படுதல் போன்றவற்றையும் குணமாக்கும். பொடுதலை சிறுசெடி வகையைச் சார்ந்தது. தரையோடு கிடைமட்டமாக படர்ந்து வளரும். பற்கள் கொண்ட சொர சொரப்பான கரண்டி வடிவ இலைகளையும், கதிரான பூங்கொத்துகளையும் உடையது. பொடுதலை ஆண்டு முழுவதும் பூக்கள், காய்களுடன் காணப்படும்....

Learn more

நெருஞ்சில்

முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்; சிறுநீர் பெருக்கும்; காமம் பெருக்கும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; ஆண்மையைப் பெருக்கும்; இரத்தைப்போக்கை கட்டுப்படுத்தும். நெருஞ்சில் கனிகளில், நிலைத்த எண்ணெய், பிசின்கள் மற்றும் நைட்ரேட் உப்புகள் காணப்படுகின்றன. நெருஞ்சில் விதைகள், சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு ஆகியவற்றைக் குணமாக்கும். நெருஞ்சில் தரையோடு படரும் செடி வகையைச் சார்ந்தது. நுண்ணிய மயிரிழைகளால் அடர்த்தியாக சூழப் பட்டிருக்கும். சுரீல் எனக் குத்தும்...

Learn more

நந்தியாவட்டை

நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல மருந்துகளில் இது சேர்கின்றது. கண்காசம், படலம், மண்டைக்குத்தல் ஆகியவை கட்டுப்படும். நந்தியாவட்டை பால், வேர், ஆகியவை காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. நந்தியாவட்டை பால் வெட்டுக் காயங்களைக் குணமாக்கும். நந்தியாவட்டை வேர், புழுக்களைக் கொல்லும். நந்தியாவட்டை புதர்ச்செடியாகவோ அல்லது குறுஞ்செடியாகவோ காணப்படும். நந்தியாவட்டை இலைகள், எதிர் அடுக்கில் அமைந்தவை. கரும்பச்சை நிறமானவை. பளபளப்பானவை. ஈட்டி வடிவமானவை. நந்தியாவட்டை மலர்கள், நுனியில்...

Learn more

நாயுருவி

நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும். நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கச் செய்யும்; ஆரோக்கியம் தரும்; முறைக் காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும். நாயுருவி வேர் கருப்பையைச் சுருக்கும்; வாந்தியை உண்டாக்கும்; கருவைக் கலைக்கும்; முக வசீகரத்தை அதிகமாக்கும். நாயுருவி...

Learn more

ஆடாதோடை

ஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக் கசப்புச் சுவை காரணமாக கால்நடைகள் கூட ஆடாதோடை இலைகளைச் சாப்பிடுவதில்லை. ஆடாதோடைக்குப் பாடாத தொண்டையும் பாடும் என்கிற பழமொழி உண்டு. ஆடாதோடை இலைகளில் ஒரு முக்கியமான எண்ணெயும், வாசிசீன் என்கிற ஆல்கலாய்டும் உள்ளன. ஆடாதோடை தாவரத்தின் முக்கியமான மருத்துவப் பண்பு சளியை வெளிக்கொண்டு வருவதாகும். இலையைக் குடிநீர் செய்து சாப்பிட்டுவர தொண்டையை எப்போதும் வலுவாக வைத்திருக்கும். சளியைப் போக்கும் தன்மையுடன்...

Learn more

குப்பைமேனி

குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன. குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் / கொழுப்பைக் குறைக்கும் பதிவுரிமை செய்யப்பட்ட மருந்து குப்பைமேனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. குப்பைமேனி தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகவும் சாதாரணமாக பரவிக் காணப்படுகின்ற ஒரு களைச் செடி. இரண்டரை...

Learn more

தும்பை

தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்; மாதவிலக்கைத் தூண்டும். தும்பை இலைச்சாறு, தலைவலி, வாதநோய் போன்றவற்றைக் குணமாக்கும். தும்பை பூ, தாகம், காய்ச்சல், கண்ணோய் போன்றவற்றிற்கு மருந்தாகும். தமிழகமெங்கும், கிராமங்களில் சாதாரணமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப்பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். கரும்பச்சை நிறமான இலைகள், நான்கு பக்கங்களைக் கொண்ட தண்டு, நடுவில் மஞ்சரித் தொகுப்பில் சுற்றி மலர்ந்துள்ள வெண்மையான,...

Learn more

தழுதாழை மூலிகை

வெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்களைத் தேற்றுவதற்கு இந்தக் கீரைப் பயன்படுகிறது. `தக்காரி’, `நத்தக்காரி’, `வாதமடக்கி’ என வேறு சில பெயர்களும் தழுதாழைக்கு உள்ளன. சித்த மருத்துவத்தில் வாத நோய்களைப் போக்கும் அருமருந்தாகத் தழுதாழை கொண்டாடப்படுகிறது. பக்கவாதம் முதலான 80 விதமான வாதநோய்களைப் போக்கும் என்கிறது சித்த மருத்துவம். தழுதாழையைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், `பாலவாதம்’ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால்...

Learn more

நொச்சி

நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை, உடல் அசதியைத் தணிக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; காய்ச்சலைப் போக்கும்; ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்; மாதவிலக்கை தூண்டும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். நொச்சி பூ குளிர்ச்சி உண்டாக்கும்; துவர்ப்புச் சுவையைத் தூண்டும். நொச்சி வேர், காய்ச்சலை கட்டுப்படுத்தும். கோழையை அகற்றும்; சிறுநீரைப் பெருக்கும். நொச்சி சிறு மரமாகவோ அல்லது குறுஞ்செடியாகவோ காணப்படும். நொச்சி இலைகள், கைவடிவமான 3 அல்லது 5 கூட்டிலைகளுடன் கூடியவை....

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
May 2022
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Tags Cloud
азартного бренда букмекерской конторы делать ставки официального сайта இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES