அருகம்புல் என்பது புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல், வரப்புகள், வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடிச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது. அருகம்புல் பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகளை தாவரம் முழுவதிலும் கொண்டுள்ளது. வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மையை அருகம்புல் கொண்டுள்ளது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் அருகம்புல்...
Learn more”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம். மேலும் அந்தப் பூவை அப்படியே உண்ணலாமாம். ஆவாரம் பூ மருத்துவ இயல்பு மனித மரபணுக்களுடன் இணைந்து காலம் காலமாக நமக்கு பலனளிக்கும் தாவர வகைகளுள் ஒன்று. தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும். ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறைகளில்...
Learn moreநல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே தன்மையுடன் தளராமல் வளரக்கூடியது. நித்ய கல்யாணி பூத்து குலுங்க எந்த வித கட்டுப்படும் வைத்து கொள்வது இல்லை. ஆண்டின் அணைத்து மாதங்களிலும் பூத்து குலுங்கி மகிழ்ந்து கொண்டே உள்ளது. நித்தியக் கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்று அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச் செடியாக இருந்தது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு...
Learn moreதுளசி(HOLY BASIL) ஒரு மூலிகை செடியாகும். இந்துக்கள் மிக புனிதமாக கருதும் செடி துளசி. இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது. ஏறத்தாழ 50 செ.மீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில்...
Learn moreசெம்பருத்தி/Sembaruthi/Hibiscus மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய இடம் வகிக்கின்றது. செம்பருத்தி சிவப்பு நிறமான பெரிய மலர்களுடன் காணப்படும். தமிழகமெங்கும் வீட்டுத் தோட்டங்களில் பெரும்பாலும் அழகுச் செடியாகவும், செம்பருத்திச் செடியின் மலர்களிலிருந்து காலணிகளை மெருகேற்றப் பயன்படும் ஒரு வித சாயம் பெறப்படுகின்றது. இதனால் ஆங்கிலத்தில் செம்பருத்திப் பூவை ஷு ஃப்ளவர் என்கிற பெயரால் அழைக்கின்றனர். ஒற்றை அடுக்கில் 5 இதழ்களைக் கொண்ட சிவப்பான பூக்கள் கொண்ட செடியே மருத்துவத்தில்...
Learn moreபூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில் 25 முதல் 28 சதவிகிதமும், அலோ பெராக்ஸ்-ல் 10 சதவிகிதமும் உள்ளது. எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்கூடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை...
Learn moreதுளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப் பெயரும் வழங்கப்படுகிறது. தண்டுகளை ஒடித்து மற்றொரு இடத்தில் நட்டால் முளைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த வகையிலேயே கற்பூரவல்லி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. கற்பூரவல்லியின் இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.கற்பூரவல்லி இலையைக் கையால் தொட்டுத் தடவி, முகர்ந்தால் ஓமத்தின் மணம் தரும். இலையில் சுரக்கும் ஒருவிதமான ஆவியாகும் தன்மையுடைய நறுமண எண்ணெய் இந்த மணத்திற்குக் காரணமாகும். கசப்புச் சுவையும்...
Learn moreஇந்தியாவில் மலைப் பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள செடி வகையைச் சார்ந்த தாவரம். விதைகள் ஓமம் எAனப்படுகின்றன. இவையே மருத்துவத்தில் பயன்படுபவை. ஓமத்திற்கு ஒரு வித சிறப்பு வாய்ந்த நறுமணம் உண்டு இது சீரக வகையை சேர்ந்தது. ஓமம் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது… ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.அசமோதம், திப்பியம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஓமத்திற்கு உள்ளது. பொதுவாக ஓமம் எனப்படுவது ஓமச் செடியிலிருந்து பெறப்படும் விதைகளையே...
Learn moreசிறுகுறிஞ்சான் இலை, சர்க்கரைக்கு (Diabetics) எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். எதிரடுக்கில் அமைந்த நீள்வட்டமான இலைகளையும், இலைக்கோணத்தில் அமைந்த பூக்களையும் உடைய சுற்றிப்படரும் கொடி. முதிர்ந்த தாவரங்கள் பெருங்கொடி அமைப்பிலும் அரிதாகக் காணப்படும். சிறு கிளைகள், நுனியின் உச்சியிலிருந்து தொங்கும் அமைப்பில் உள்ளவை. மலர்கள், வெளிர் மஞ்சள் நிறமானவை. காய்கள் பச்சையானவை, முதிர்ந்த காய்களிலிருந்து பஞ்சு போன்ற நார்களுடன் விதைகள் வெளிப்பட்டு, பறக்கும். தமிழகத்தில், வேலிகள், முட்புதர்க் காடுகள், பாழடைந்த காடுகளில் பரவலாக வளர்கின்றது. இலை, வேர்,...
Learn moreகீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் காணப்படுகின்றது. கீழா நெல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. கீழா நெல்லி இலைகள், சிறியவை. கூட்டிலை வடிவமானவை. இரு வரிசையாக அமைந்தவை. கீழா நெல்லி இலைகளைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய நடு நரம்பின் கீழ்ப் பாகம் முழுவதும் கீழ் நோக்கிய பசுமையான சிறு பூக்களும் காய்களும் தொகுப்பாகக் காணப்படும். இதனாலேயே கீழாநெல்லி என்றப் பெயர் பெற்றது. ஈரமான...
Learn more
Login with