Login

Register

Login

Register

Tag: பாரம்பரிய நெல் ரகங்கள்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

பாரம்பரிய அரிசி

பிறந்த குழந்தைக்குக் குறைந்தபட்சம் மூன்று மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றுதான் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று அனைத்து வகை மருத்துவர்களும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், இந்த நவீன உலகில் ’எனக்கு பாலே சுரக்கவில்லை டாக்டர்’ என்று சொல்லும் பெண்கள்தான் பெருகி வருகிறார்கள். ’குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுதான் நல்லது’ என்று மனதையும்; இந்த இந்த உணவுகளைச் சாப்பிட்டால் பால் பெருகும்’ என்று உணவு முறைகளையும் மாற்றிக்  கொண்டால்… பால் பொங்கும் என்பதே உண்மை என்கிறது இந்திய...

Learn more

பாரம்பரிய நெல் ரகங்கள்

நம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள் வழக்கொழிந்து விட்டன. பசுமைப் புரட்சியின் கை ஓங்கியிருந்த காலத்தில் அரசு வேலையைத் துறந்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப் புறப்பட்டார், நம்மாழ்வார். அவருடன் சில மாதங்கள் சில இளைஞர்கள் குழுவாகப் பயிற்சி பெறுவது வழக்கம். அப்படித்தான் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தில் நம்மாழ்வார் பின்னால் செல்லும் குழுவில் பயணித்தவர்களில் ஒருவர்தான் ‘நெல்’ ஜெயராமன்.

Learn more

நெல்லுக்கு இயற்கை உரங்கள்

இரண்டு முறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தோடு 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு, ஒருகிலோ அசோபாஸ் அல்லது தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் வைத்திருந்து தூவ வேண்டும். மேல் உரம் கொடுத்து 10 முதல் 15 நாட்களுக்கு பிறகு, வேளாண்மைத்துறை வெளியிட்டிருக்கும் பச்சைவண்ண அட்டையைப் (லீப் கார்டு) பயன்படுத்தி இலைகளின் நிறத்தைப் பார்க்க வேண்டும். அதில் மூன்றாம்...

Learn more

இரா.ஜெயராமன் வாழ்க்கை வரலாறு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்.9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலைச் செய்தார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003-ல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார்.அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளைச் சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறுஉற்பத்தி செய்து...

Learn more

கருடன் சம்பா

கருடன் சம்பா பாரம்பரிய நெல் வகையைச் சார்ந்த இது, அனைத்து தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகையாகும். கருடன் (கழுகு) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் காணப்படுவதால் இந்நெல்லுக்கு அப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய இந்த நெல் இரகம், நான்கடி உயரம் வரை வளரக்கூடியது. இந்த கருடன் சம்பா சாப்பாட்டிற்கும், மற்றும் பலகாரங்களுக்கும் ஏற்ற இரகமாகக் கருதப்படுகிறது....

Learn more

மாப்பிள்ளை சம்பா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் கிரியேட், நமது நெல்லைக் காப்போம் அமைப்புகள் சார்பில் 2 நாள் நடந்த தேசிய அளவிலான நெல் திருவிழா நேற்று நிறைவடைந்தது. மண் வளமும், மேம்பாடும் என்ற தலைப்பில் கோவில்பட்டி வேளாண் அலுவலர் பூச்சிச் செல்வம் பேசுகையில், இந்தியாவில் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இவற்றையெல்லாம் ரசாயன உரங்களின் வரவால் நாம் இழந்து விட்டோம். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியை...

Learn more

தங்கச் சம்பா

தங்கச் சம்பா  பட்டத்துக்கு (தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் வரை, சம்பா பட்டம்) ஏற்ற பாரம்பரிய நெல் வகையான இது, நூற்றி முப்பது நாட்களிலிருந்து, இருநூறு நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஆடிப்பட்டத்தில் சாகுபடிச் செய்ய ஏற்ற இரகமான தங்கச் சம்பா, ஐந்தடி வரை வளரும் மோட்டா (தடித்த) இரகமாகும். மத்திய காலப் பயிராகக் கருதப்படும் இப்பயிர், இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியதாகும். தங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம் போல் மிளிரும் தன்மைக் காணப்படுவதால், இந்த...

Learn more

குடவாழை

குடவாழை அல்லது குடைவாழை பாரம்பரிய நெல் வகைகளில் முக்கிய இடம்பிடித்துள்ள இந்த நெல் இரகம், இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரவும், உவர் நிலத்தைத் தாங்கி வளரவும், கடலோரப் பகுதியில் கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடிச் செய்யவும் ஏற்ற இரகமாகும். தமிழகத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் வட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. அந்த வகைகளில், இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம் வேதாரண்யம் உழவர்களிடம் இன்றைக்கும் உள்ளது குடைவாழை என்றழைக்கப்படும் இந்நெல்...

Learn more

வரப்புக் குடைஞ்சான்

வரப்புக் குடைஞ்சான் அல்லது வரப்புக்குடைந்தான் என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ‘சத்திரகுடி’ எனும் நாட்டுப்புற பகுதியில் பிரதானமாகப் பயிரிடப்படுகிறது. இது மூன்று மாத காலப் பயிராகும். ஒரு ஏக்கருக்கு சுமார் 1000 கிலோ முதல், 1200 கிலோ வரையில் மகசூல் தரக்கூடிய இந்த நெல் வகை, கேரளா மாநிலத்தில் அதிக விலையாக ரூபாய் (र) 7.50/கிலோ விலையைப் பெறுகிறது. இவ்வகை நெற்பயிர்களின் வேர்கள் வரப்பு முகடுகளை ஊடுருவி...

Learn more

பிசினி

பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக் கொண்ட இரகமாகும். நூற்றி இருபது நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். இந்த வகை நெல்லின் அரிசி மோட்டாவாகவும், சிவப்பு நிறமும் கொண்டது. எவ்வகை மண்ணையும் ஏற்று வளரக்கூடிய இந்நெல் இரகம், ஐந்தடி உயரம்வரை வளரும் தன்மையுள்ளது. கடும் வறட்சியையும், அதேநேரம் பெருவெள்ளத்தையும் தாங்கிச் செழிக்கும் இது, ஒரு ஏக்கருக்கு சுமார் 28 மூட்டை (75 கிலோ மூட்டை) வரை மகசூல் கொடுக்கக்கூடியதாகும். நேரடி விதைப்புக்கும், மற்றும்...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30