Login

Register

Login

Register

Tag: பழச்சாறுகளின் மகத்துவம்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

மாதுளம் பழச்சாறு

மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள். ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில் தான் அதிகம் உள்ளது. என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவ சிறப்புகளையும் இப்போது பார்போம்.  மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து 78 விழுக்காடு உள்ளது. புரதச்சத்து 1.6 விழுக்காடும், நார்ச்சத்து 5 விழுக்காடும், கார்போ...

Learn more

தக்காளிச் சாறு

 தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.  மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைகப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்கள் குணமாகும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகமான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.

Learn more

எலுமிச்சைச் சாறு

பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சைச் பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது.  எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுகடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும்.  ஆனால் அளவுக்கு அதிகமாக இதை அருந்தும் போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும். இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய்...

Learn more

ஆரஞ்சுச் சாறு

தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச் சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்த உடல் நலம் பெறலாம்.  இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜீரம் ஆகியவை குணமாகும்.  ஆரஞ்சு சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாரளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல்...

Learn more

திராட்சைச் சாறு

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண்(அல்சர்), காமாலை, வாயுகொளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.  திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருத்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

Learn more

ஆப்பிள் பழச்சாறு

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேலையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும். ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.  மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

Learn more

அத்திப்பழச் சாறு

 அத்திப்பழத்தை புட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.  இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும். அத்திப்பழமும் தேனும் கலந்து கல் உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம்.  ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்.

Learn more

தர்பூசணிப்பழச் சாறு

கோடையின் கொடுமைலிருந்து விடுபட நினைபவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போதுதோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.  நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சம அளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30