பயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை அழிக்கும் ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதால், மக்கள் கொடிய நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர், என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார். தமிழக விவசாயிகள் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கின்றனர். இதுகுறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதாவது. தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள்...
Learn moreஅதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு திரும்புமாறு விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறைகூவல் விடுத்துள்ளார். புதுக்கோட்டை அடுத்த வாகைப்பட்டியில் ரோஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாப்பது குறித்த விவசாயிகளுக்கானக் கருத்தரங்கு நடந்தது. இதை துவக்கிவைத்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது. உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வெளிநாடுகளிடம் ஆலோசனைகள் பெற்று நவீன ரக தானியங்களை குறிப்பாக...
Learn more“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு வேளாண் மன்ற சட்டம் குறித்தக் கருத்தரங்கம் திருச்சியில் நேற்று நடந்தது. ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வரவேற்றார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் மன்றச்சட்டத்தை நிரந்தரமாக தமிழக அரசு கைவிடவேண்டும். வேளாண்மையும், வேளாண் குறித்த ஆராய்ச்சி மற்றும் கல்வி அறிவையும் பன்னாட்டு மற்றும்...
Learn moreராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர் தின விழா கிரியேட் அறக்கட்டளைச் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. கிரியேட் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வரவேற்றார். விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே தற்போது அதிகரித்து வருகிறது. பருவகால மாறுபாடுகள் காரணமாக வறட்சியாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். கடனை திருப்பி அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது....
Learn moreஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு தேவை என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் கூறினார். உலகம் முழுவதும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக நடுநிலை விஞ்ஞானிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மரபணு விதைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மேலைநாடுகளில் நிரூபிக்கப்பட்டப்பின்னரும், இங்குள்ள அமைச்சர்கள் வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர். ரசாயன மருந்துகள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் கோதுமை, நெல் உள்ளிட்டவை விஷமாகிவிட்டன. இதை உண்ணும் மக்கள் புற்றுநோயால்...
Learn moreஇயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத் திருவிழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது பசு மாட்டை தாயாகவும், தெய்வமாகவும் பார்கிறோம். பசுவின் மூலம் பெறப்படும் பஞ்ச கவ்யம் உடலில் ஏற்படும் நோயை நீக்குகிறது. வெளிநாட்டினர் பசு மாட்டை பால் வழங்கும் இயந்திரமாக பார்க்கின்றனர். இயற்கை ஒரு போதும் தவறு செய்வதில்லை. உடலும் தனது கடமையைச் செய்ய தவறியதில்லை. மனிதன்...
Learn more
Login with