துளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப் பெயரும் வழங்கப்படுகிறது. தண்டுகளை ஒடித்து மற்றொரு இடத்தில் நட்டால் முளைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த வகையிலேயே கற்பூரவல்லி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. கற்பூரவல்லியின் இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.கற்பூரவல்லி இலையைக் கையால் தொட்டுத் தடவி, முகர்ந்தால் ஓமத்தின் மணம் தரும். இலையில் சுரக்கும் ஒருவிதமான ஆவியாகும் தன்மையுடைய நறுமண எண்ணெய் இந்த மணத்திற்குக் காரணமாகும். கசப்புச் சுவையும்...
Learn more
Login with