nammalvar அமர்ந்து உணவருந்தும் முறையில் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருகின்றன. முன்பெல்லாம் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் இருந்தது. இப்போது ‘டைனிங் டேபிள்’(dining table) பயன்பாடு அதிகரித்துவிட்டது.
nammalvar ஆனால் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுவதே சரியான முறை. அதுவே ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்று கூறுகிறார்கள்.

ஏன்?
nammalvar சம்மணமிட்டு அமரும்போது கால்கள் குறுக்காக இருக்கும். இது பத்மாசன யோகாசன நிலை போன்றது. இந்த நிலையில் மனது சாந்தமாகும். சாப்பிடும் உணவும் எளிதாக ஜீரணமாகும் என்று ஆயர்வேதம் குறிப்பிடுகிறது.
nammalvar சம்மணமிட்டு அமரும்போது ‘டூ இன் ஒன்’ பலன் கிடைக்கிறது. யோகா செய்யும் பலனோடு, சரியான முறையில் சாப்பிடவும் முடிகிறது. பத்மாசன நிலையில் அமரும்போது முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் ஏற்படாது.
nammalvar முதுகெலும்புக்கு அழுத்தம் குறையும்போது மனது இயல்பாகவே சாந்தமாகிவிடும். அமர்ந்து சாப்பிடும்போது சாதத்தை பிசைந்தும் உருட்டும் பொது தன்னை அறியாமலே உடல் சற்று முன்னோக்கி வரும்.
nammalvar அதை வாயில் இட்டு விழுங்கும்போது இயல்பாகவே உடல் பின்னோக்கி செல்லும். இப்படி முன்னோக்கி, பின்னோக்கி அசைவுகள் தொடர்ச்சியாக நடக்கும்போது ஜீரணதிற்காக உருவாகும் திரவங்கள் நன்றாக சுரக்கும்.
nammalvar அடிவயிற்று தசைகளும் நன்றாக இயங்கும். இதனால் ஜீரணம் எளிதாகும். உட்காருவதும், எழுவதும் நல்ல உடற்பயிற்சி. தரையில் சம்மணமிட்டு ஒருவரால் சாப்பிட முடிகிறதென்றால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம்.

nammalvar longdesc=