nammalvar செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ, கல்லாலோ செய்யபட்டிருக்கும். செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்க படுகிறது.
nammalvar ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் மூலம் இயக்கபடுகிறது.
nammalvar பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்டவித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்.
nammalvar செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க) சேர்த்து ஆட்டுவது வழக்கம். சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும். மரசெக்கில் கருபட்டியுடன் சேர்த்து எள்ளை ஆற்றும் பொழுது அவளவாக வெப்பம் ஏறாது.
nammalvar அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்பமாக்கள் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இப்படி மர செக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மனமும் குணமும் இருப்பது இயற்கை. இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான்.
nammalvar மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும். ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத்திற்கு கெட்டு போகாமலும் இருக்கும். ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் அதன் ருசி கால காலத்திற்கும் மறக்காது.
nammalvar இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும். குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் சமைக்கலாம்.



nammalvar


தேங்காய் எண்ணெய் பயன்கள்

மேலும் படிக்க
nammalvar


நிலக்கடலை எண்ணெய் பயன்கள்

மேலும் படிக்க
nammalvar


நல்லெண்ணையின் பயன்கள்

மேலும் படிக்க