nammalvar அகத்திகீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஸ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.
nammalvar வெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
nammalvar வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
nammalvar கொத்தமல்லியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு மென்று தின்றால் உடல் சூடு குறையும். நன்கு பசி எடுக்கும்.
nammalvar கல்யாண முருங்கை இலையுடன் ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.
nammalvar கொடிப்பசலைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால், வெட்டைச் சூடு, கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் தீரும்.

namalvar உடல் சூடு

nammalvar குப்பைக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல்சூடு குறையும்.
nammalvar கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அடிக்கடி சாப்பிட்டால் வெட்டைச் சூடு குறையும். பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு, குடல் புண் ஆகியவை தீரும்.
nammalvar புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.
nammalvar பிண்ணாக்குக் கீரைச் சாறில் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, பிறகு காய வைத்துப் பொடியாக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் உடல் சூடு தணியும். முக்குளிக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
nammalvar முருங்கைக்கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும். பொடுகுப் பிரச்சனையும் இருக்காது. பாற்சொரிக்கீரை, முளைக்கீரை இரண்டையும் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.