nammalvar தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. அதிகமான செலவும் இருக்காது. செடிகளை ஆறடி உயரம் வரை வளர்த்து அதை அந்த இடத்திலேயே மடக்கி உழுது உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
nammalvar இதுகுறித்து: ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ, தக்கை பூண்டு விதையை விதைத்து, 45 முதல் 70 நாள்கள் அல்லது 50 முதல், 60 நாட்களுக்கு பின்னர், 6 அடி வரை நன்றாக வளர்ந்த தக்கை பூண்டு செடிகளை பூப்பூத்தவுடன் அதை அந்த இடத்திலேயே மடக்கி உழுது அதையே உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
nammalvar அது மண்ணோடு மக்கி பசுந்தாள் உரமாக மாறிவிடும். இவ்வாறு செய்வதால் அடுத்து போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. செலவும் அதிகம் இருக்காது. மண்ணின் வளம் கெடாமல் பாதுகாக்கப்படும்.
nammalvar இந்த தக்கைப்பூண்டு செடிகள் உரமாக மாறி மண்ணின் தன்மையை அதிகரிக்கும். முக்கியமாக அடுத்து போடப்படும் பயிருக்கு தழைச்சத்து கிடைத்து விடுவதுடன் பூச்சி தாக்குதலே இருக்காது என்பதும் குறிப்பிடத் தக்கது.
nammalvar ஒரு மூட்டை ரசாயன உரம் ரூ.1500 வரை வாங்க வேண்டிய இந்தக்காலத்தில் இது போன்ற தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி மண்ணின் வளத்தை பாதுகாப்பதுடன் நல்ல மகசூலையும் பெறலாம்.