nammalvar எலுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போடுவதன் மூலம் செடிகள் நன்றாக செழித்து வளரும், அதேபோல் காயும் திரட்சியாக காணப்படும்.
nammalvar தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டினைக் கட்டுப்படுத்த 5 கிலோ மாட்டுச்சாணம் மற்றும் 1 கிலோ ஆமணக்கு ஆகிய இரண்டையும் தண்ணீரில் நன்கு கரைத்து, மண் சட்டியில் ஊற்றி, தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் வைத்தால், வண்டுகள் இதில் விழுந்து இறந்துவிடும்.
nammalvar வறட்சிக்காலத்தில் கால்நடைகளுக்கு புளியங்கொட்டையின் தோலை நீக்கி பொடியாக்கி, வேக வைத்து கூழாக அளிக்க வேண்டும். ஒரு பசுவிற்கு அரை கிலோ வீதம் கொடுப்பதன் மூலம் அடர் தீவன அளவை குறைக்கலாம்.
nammalvar உளுந்து, தட்டைப்பயிறு, நரிப்பயிறு ஆகிய பயிறு வகை பயிர்களைக் சேமிக்கும் பொழுது சாக்கு அல்லது டிரம்மில் முதலில் கைப்பிடி அளவு உப்பை அடியில் போட்டு அதன் மேல் பயிறுகளை கொட்டி சேமிக்க வேண்டும். இதனால் பொட்டு எதுவும் வராது.
nammalvar வீட்டுத் தோட்டத்தில் கொய்யா, மா, சப்போட்டா போன்ற மரவகைகள் இருந்தால், முதல் இரண்டு வருடம் பூக்கும் பூக்களை உருவி விடுவதன் மூலம் பின்னால் காய்கள் நன்றாக காய்க்கும்.
nammalvar வறட்சியில் இருந்து மாடுகளை பாதுகாக்க கொட்டகையின் பக்கவாட்டில் நனைத்த கோணிப் பைகளைக் கட்டி வைக்க வேண்டும்.
nammalvarn தென்னையில் மகரந்த சேர்க்கையை அதிகரித்து அதிக காய் பிடிக்க ஏதுவாக ஏக்கருக்கு ஜந்து தேனீப் பெட்டிகளை வைக்க வேண்டும். தென்னையுடன் தேன் கிடைப்பது இரட்டிப்பு லாபம் தான்.
nammalvar 'நெல்லுக்கு நண்டோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட" நெல் நடவு செய்யும் பொழுது ஒரு பயிருக்கும், மற்றொரு பயிருக்கும் ஒரு நண்டு போகும் அளவிற்கு இடைவெளி விட்டு நடவேண்டும்.
nammalvar வாழைக் கன்றை நடவு செய்கின்றபோது ஒரு மாட்டு வண்டி போகுமளவு இடைவெளி விட்டு நட வேண்டும்.
nammalvar தென்னைக்கு ஒரு தேர் ஓடுமளவிற்கு இடைவெளி விடவேண்டும்.
nammalvar பயிர்களுக்கு எவ்வாறு இடைவெளி அளிக்க வேண்டும் என்பதை இப்பழமொழி உணர்த்துகின்றது.