nammalvar பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு பிரச்சனை சரியாகும்.
nammalvar கொடிப்பசலைக் கீரைச் சாறில் பாதம் பருப்பை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
nammalvar கானாம்வாழைக் கீரை(உலர்த்தியது – 100 கிராம்) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்சனையும் தீரும்.
nammalvar துத்திக்கீரையுடன், கற்கண்டு சேர்த்து அரைத்துப் சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
nammalvar பாலக் கீரையுடன் குடை மிளகாய், பூண்டு கசாகசா ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு குணமாகும்.
nammalvar பாலக் கீரையுடன் முளை கட்டிய பச்சைப் பயிரைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
nammalvar முள்ளிக் கீரை சாறில் கொள்ளை கொண்டைக் கடலையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், ஆண்மை பெருகும். நரம்புகள் இறுகும்.
nammalvar பாற்சொரிக் கீரையைத் தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
nammalvar சுக்குக் கீரைச் சாறில் முந்திரிப்பருப்பை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். சுக்குக் கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் விந்து விரைந்து வெளியேறுதல் பிரச்சனை சரியாகும்.

namalvar