namalvar
விவசாய புரட்சி

இன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம். இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிடக் கூடாது என அயராது உழைத்த உயர்ந்த நெஞ்சம். தமிழகத்தில் விவசாயத்தை, வேளாண்மையை பாதுகாக்க அரசையும் எதிர்த்து போராடிய பெருமகனார் தான் நமது விவசாயப் புரட்சியாளர் நம்மாழ்வார் ஐயா. பிறப்பில் இருந்து, இறப்பு வரை விவசாயமே மூச்சாக வாழ்ந்த மாமனிதர் நம்மாழ்வார். இனி, இவரை பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்தும், இவரது வரலாறு குறித்தும் காணலாம்.

போராட்டம் :
nammalvar இயற்கை விவசாயப் புரட்சியை ஆதரித்தும், விவசாய நிலங்கள் தொழில் மயமாக்கம் ஆவது, சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு அதிகரிப்பது போன்றவற்றை எதிர்த்தும் காரசாரமான விமர்சனங்களும், ஆக்கப் பூர்வமான மாற்று கருத்துகளையும் எடுத்துக் கூறியவர் நம்மாழ்வார் ஐயா.

பணிகள் :
nammalvar 1960-ம் ஆண்டு கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் ஆய்வு உதவியாளராக பணியாற்றினார். இங்கு பயனில்லா பணிகளுக்கு எதிர்த்து குரல் கொடுத்து மூன்று ஆண்டுகளிலேயே வெளியேறினார்.
nammalvar 1963-ம் ஆண்டு மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். இங்கும் மூன்று ஆண்டுகளில் தான் பணியாற்றினார் நம்மாழ்வார். பிறகு ஜப்பானிய சிந்தனையாளர் மசனோயு ஃபுக்குவோக்காவின் செயல்பாடு மற்றும் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார் ஐயா.

உருவாக்கிய அமைப்புகள் :
nammalvar 1979 - ல் குடும்பம்
nammalvar 1990 -லிசா (1990 – LEISA Network)
nammalvar 1990– மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுங்கி, ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India) நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்.

வானகம் (பண்ணை) :
nammalvar அறக்கட்டளை சட்டத்தின் கீழ் “வானகம்” 02.6.2009 அன்று திரு.கோ.நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்டது. “வானகம்” கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுருமான்பட்டியில் அமைந்துள்ளது தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்.

விவசாய புரட்சி :
nammalvar தமிழகத்தில் இயற்கை முறை வேளாண்மையை ஊக்குவித்தார். மரபணு மாற்றப்பட்ட விதைகளை எதிர்த்து, பாரம்பரிய விதைகளை வைத்து விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அனைவர் மத்தியிலும் விதைத்தார்.

விருதுகள் :
nammalvar தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது.
nammalvar திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.