nammalvar திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக, அனுபானமாக பயன்படுத்துவது உண்டு. திரிகடுகம் சிறந்த கார்ப்புள்ளது.
nammalvar நுரையீரல், ஜீரண மண்டலப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும்.
nammalvar இனப்பெருக்க உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும், கரு முட்டை வெடித்தல் குறைபாடுள்ள பெண்களுக்கு நல்லது. மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள், அதிகக் கொழுப்பு சத்துள்ள நோயாளிகள், உடல் வீக்கம், வளர்சிதை மாற்றமுள்ள நோயாளிகளுக்கு இது தக்க துணைமருந்துகளோடு நன்றாக வேலை செய்யும்.