Login

Register

Login

Register

பாரம்பரிய உணவுகள் என்றால் என்ன?

பாரம்பரிய உணவுகள் என்பவை பாரம்பரிய விதைகளிலிருந்து விளைந்தவை. அதாவது புதிய ஒட்டு ரக விதைகளிலிருந்து உருவானவையல்ல. கடந்த சில பத்தாண்டுகளாக நெல்லிலும், சிறுதானியங்களிலும் ஒட்டுரக விதைகள் அறிமுகமாகி பயன்பாட்டில் உள்ளன. இவற்றை தவிர்த்து மரபு வழியிலான விதைகளிலிருந்து விளைந்தவையே பாரம்பரிய உணவுகளாகத் தகுந்தவையாகும்! இதுமட்டுமின்றி, பயிர்விளைச்சலுக்கு ரசாயண உரங்களையோ, பூச்சிகொல்லி மருந்துகளையோ முற்றிலும் தவிர்த்து உருவாக்கப்பட்டவையே பாரம்பரிய உணவுகளாகும்!


மானாவரிநிலத்திலும், மலைமுகடுகளிலும் விளையும் புன்செய் பயிர்களான சிறுதானியங்களும், தண்ணீர்வரத்துள்ள நன்செய் பயிர்களான பாரம்பரிய அரிசிகளும் ஊட்டசத்துமிக்க பாரம்பரிய உணவுகளாகும்! திணை, வரகு, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, பனிவரகு எனப்புடும் பெருஞ்சாமை, சிறுசோளம் போன்றவற்றைத் தான் நாம் சிறுதானியங்கள் என்ற பொதுப் பெயரில் அழைக்கிறோம். இந்த சிறுதானியங்களில் என்னென்ன உணவுவகைகளைச் செய்யலாம்? என்றால் செய்யமுடியாதது என்ன? எல்லாமே செய்யலாம்!வெரைட்டிரைஸ் மாதிரியான கலவைச்சோறுகளை அருமையாகச் செய்யலாம். திணை, வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்றவற்றில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சோறு, தேங்காய்சோறு, எலுமிச்சைசோறு, கூட்டாஞ்சோறு, புளியோதரை, எள்ளுசோறு, புதினாசோறு, கீரைச்சோறு, காய்கறி பிரியாணி, தயிர்சோறு போன்ற சோறு வகைகளை செய்யலாம்!அதேபோல் இட்லி, தோசை, உளுந்துசேர்த்தகளி , வெந்தயம் சேர்த்தகளி, கும்மாயம், இடியாப்பம், குழிப்பணியாரம், கொழுக்கட்டை, கட்லெட், அடை, உப்புமா, ஆப்பம், புட்டு, சேவை போன்ற பலகார வகைகளும் செய்யலாம்.


சற்றே கோதுமையைச் சேர்த்து சப்பாத்தி, பூரியும் செய்யலாம். லட்டு, அதிரசம், மைசூர்பா, கேசரி, தொதல், அல்வா, பாயாசம் போன்ற இனிப்பு வகைகளைச் செய்தும் அசத்தலாம். ரிப்பன் பக்கோடா, முறுக்கு, தட்டடை, சீடை, காரச்சேவு போன்ற திண்பண்டங்களையும் செய்யலாம்.அதே சமயம் ஒவ்வொரு சிறுதானியமும் தனிப்பட்ட தன்மையும், சுவையும் கொண்டது என்பதால் அது அதற்கேற்ற சமயைலைச் செய்வது சிறப்பாக இருக்கும்!