Login

Register

Login

Register

இந்து உப்பு என்றால் என்ன ?

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

இந்து உப்பு என்றால் என்ன ?

மனிதனுக்கு உப்பு என்ற ஒன்றை தெரிந்திருக்காவிட்டால் அவன் நாடோடி வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக விட்டிருக்க மாட்டான் என்கிறார்கள் மனித பரிணமாத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள். அதாவது மனிதன் சாப்பிடக் கிடைத்த தானியங்களுடன் சேர்த்துக் கொள்ள தேவையான உப்பு எங்கெல்லாம் கிடைத்ததோ, அங்கெல்லாம் புதிய மனித குழுக்கள் தங்கி மனித குடியேற்றங்கள் உருவாகியிருக்கின்றன. கடற்கரையில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் பெரும்பாலும் உப்பை அடிப்படையாக கொண்டவை என்கிறார்கள்.
இப்படி உப்புக்கு பெரிய வரலாறு இருக்கிறது. உப்பு இல்லாமல் உணவுகள் இருக்க முடியாது என்பது உண்மை. உப்பை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் பயன்படுத்தி வந்ததாக சான்றுகள் இருக்கின்றன. எகிப்திய நாடு ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் செல்வாக்கு பெற்ற நாடாக விளங்கியிருக்கிறது. காரணம், எகிப்தியர்கள் சகாரா பாலைவனத்திலிருந்த உப்பை வெட்டி எடுத்து ஒட்டகத்தின் மேல் ஏற்றி வந்து சுற்றியுள்ள நாடுகளுக்கு எல்லாம் விற்பனை செய்து செல்வத்தை ஈட்டியிருக்கிறார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட The Book Of Job என்ற நூலில் உப்பைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பைபிளில் உப்பை பற்றி 30 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உப்பை நேர்மைக்கும், நீதிக்கும் ஒரு அடையாள சின்னமாக அதில் குறிக்கப்படுகிறது. இந்துக்களிடம் கூட சத்தியத்தை உறுதி செய்ய உப்பின் மேல் சத்தியம் பெறும் வழக்கம் இருக்கிறது. இப்படி பல நாடுகளிலும் உப்புக்கு இருக்கும் வரலாற்றை பல நூறு பக்கங்களுக்கு சொல்லிக் கொண்டே போகலாம். நாம் இந்தியாவில் கிடைக்கும் உப்பையும், குறிப்பாக இந்துப்பு பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் உப்பு

இந்தியாவில் உப்புத் தொழில் மிகத்தொன்மையானது. கி.மு நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த மெளரியரின் அமைச்சரவையில் இருந்த கெளடியல்யர் அர்த்த சாஸ்திரத்தை எழுதி புகழ் பெற்றார். இவருக்கு சாணக்கியர் என்ற பெயரும் உண்டு. இந்த நூலில் இந்தியாவில் கிடைக்கும் பல வகை உப்புக்களைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். நாம் இங்கு சொல்ல வந்த “சைந்தவா” என்று அழைக்கப்படும் இந்துப்பு சிந்து மாகாணத்தில் கிடைப்பதால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

இது தவிர, “சமுத்ரா” அதாவது கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பு, “உத்பேஜா” அல்லது உப்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும் ஒரு உப்பு, “ரோமகா” உறைந்து படிவங்களாகக் கிடக்கும் உப்பு, “ஒளத்பிதா” என்று ஒரு உப்பு. இப்படி 5 வகை உப்புகள் இந்திய நாட்டில் கிடைப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த உப்பானது பாறை போலவும், படிகங்களாகவும் பூமியின் மேற்பரப்பிலும், அதற்கடியிலும் இருந்து வந்துள்ளது. பூமியின் ஆழத்தில் இருக்கும் இந்த இந்துப்பை எடுக்க, சுரங்கம் தோண்டி கரிச்சுரங்கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பது போல் எடுத்து மேலே கொண்டு வருவார்கள். இந்தியாவில் இமாசலபிரதேசத்தில் மன்டி என்ற இடத்தில் இந்துப்பு கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சில இடங்களில் கிடைத்தாலும் இந்துப்பு பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.

அயோடைஸ்டு சால்ட்- அதாவது அயோடின் கலந்த உப்பு. இதைத்தான் நாம் உணவு சமைக்கப் பயன்படுத்தி வருகிறோம். கடலில் இருந்து எடுக்கப்பட்டு பின் தொழிற்சாலைகளில் வைத்து அயோடின் என்ற திரவம் கலக்கப்பட்டு வரும் இந்த உப்பு தான் நமது உடலுக்கு உகந்ததா? நிச்சயமாக இது நூறு சதவீதம் சரியென்று சொல்லி விட முடியாது. இதில் இந்துப்பு (Halite or Rock Salt) தான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் சொல்கின்றன. ஆக..இனி இந்துப்பைப் பற்றி பார்க்கும் முன்பு பொதுவாக உப்புப் பற்றியச் செய்திகளை இங்கு தருகிறேன்.

இந்துப்பு என்பது ஆங்கில மொழியாக்கத்தில் “ ராக் சால்ட்“ அதாவது பாறை உப்பு என பொருள்படும். இவை முதலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆனது. பின் இமய மலையின் அடிவாரப் பகுதியில் இயற்கை சீற்றத்தின் விளைவாக நிலத்தின் அடிப்பகுதியில் உப்பு படிமங்கள் புவிஅழுத்தம் காரணமாக பாறைகளாக மாறின. அதை சுரங்கம் தோண்டி உப்பு பாறைகளை வெட்டி எடுத்ததினால், அதுவும் இமய மலைப் பகுதிகளின் அருகில் (இந்தியாவிலேயே) எடுத்ததினால் ஹிமாலயா உப்பு அல்லது இந்திய உப்பு என்று அழைக்கப்பட்டு பின் பெயர் மருவியோ அல்லது மாற்றப் பட்டோ, அது இந்துப்பு ஆனது.

உப்புப் பல முறைகளில் தயாரிக்கப் பட்டாலும், முக்கியமாக இரண்டு முறைகளைக் குறிப்பிடலாம்.

கடற்பகுதிக்கு அருகில் இருக்கும் காரத் தன்மை அதிகம் உள்ள நிலங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதிலிருந்து நீரை எடுத்து நிலத்தில் பாய்ச்சி உப்பளங்களை உருவாக்கி அதில் உப்பு எடுப்பது. (கடல் நீரில் இப்போது உப்பு எடுப்பது இல்லை, ஏனெனில் செலவு மிக மிக அதிகம் என்பதால்)

அதை விட உப்பு அதிகமாகவும், செலவு குறைவாகவும் நிலத்தடியில் உப்பு பாறைகளை வெட்டி எடுக்கும் முறைதான் இப்போது 90 சதவீதம் நடைபெறுகிறது.
உங்கள் இல்லங்களில் உள்ள பிரபல கம்பெனியின் உப்பும் இந்த முறையில் தயார் ஆவதுதான். மேலும் இப்படி வெட்டி எடுக்கும் பாறை உப்பு ஐந்தாறு வழிகளில் தயாரிக்கப் படுகிறது.

  1. வெட்டி எடுக்கப் படும் கற்களை அப்படியே அரைத்து இயற்கை உப்பு என சொல்லி விற்பது.
  2. மிகப் பெரிய கம்பெனிகள் நிலத்தடியில் வெட்டி எடுக்கப் படும் உப்பை இரசாயன முறையில் தயாரித்து சில பல தில்லு முல்லு வேலை செய்து பளபளப்பாக்கி நான்கு மடங்கு விலைக்கு விற்கிறது.
  3. இன்னும் ஒரு படி மேலே போய் அந்த உப்பு கற்களைச் சிறிது பாலீஸ் செய்து கட்டியாகவே கிலோ 400 ரூபாய்க்கு விற்பனைச் செய்கிறார்கள்.
  4. இன்னும் சில கம்பெனிகள் சில சுவைகளைச் சேர்த்து விற்கிறது.

இந்துப்பு தயாராகும் முறை:

வெட்டி எடுத்து வந்த உப்புப் பாறை கற்களைச் சிறு பொடி கற்களாக உடைத்து இளநீர் பழங்காடி, பின் சுத்த நீர் ஒவ்வொன்றிலும் சில மணி நேரம் ஊற வைத்துப் பின் காய வைத்து நன்கு உலர்ந்ததும் இதை 110 டிகிரி வெப்பத்தில் வறுக்கும் போது இந்த உப்பு கற்கள் வெடிக்கிறது. அப்படி வெடித்ததை நயமாக அரைத்து சல்லடையில் சலித்து மாவு போல ஆக்குவதற்கு ஒருவாரம் ஆகிவிடுகிறது. அதுவும் 100 கிலோ கற்கள் போட்டால் 40 கிலோதான் மிஞ்சுகிறது. எதற்காக இவ்வளவு பிராசசிங் – உப்பில் அதிகம் சோடியம் உள்ளது. அது உடலுக்கும்,சிறுநீரகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இந்த முறைகளில் சோடியத்தின் அளவை பத்து சதவீதத்திற்கும் கீழே கொண்டு வந்து விடுகிறது.

இந்துப்பு பொதுவாக நாட்டுமருந்துக்கடைகளில் காதி கிராப்ட்டில் கிடைக்கும். தூத்துக்குடியிலிருந்து சிலர் இந்த இந்துப்பை வாங்கி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு விற்பனைச் செய்து வருகின்றனர். ஆகவே நண்பர்களே, இனி இந்துப்பை வாங்கி பயன்படுத்துவோம். உடலுக்கு மிகவும் நல்லது. எந்த கெடுதலும் இல்லை. சாதாரண சமையல் உப்பில் கிடைக்கும் சுவை இதிலும் கிடைக்கும். கால், கை வீக்கம் தோன்றினால் டாக்டர்கள்,” உப்பை குறைங்க” என்பார்கள். அப்படி ஒரு பிரச்சினை இந்துப்பில் வருவதில்லை. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், மற்றவர் அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும்!!!
மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.

  1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
  2. ஆண்மையை வளர்ப்பது.
  3. மனதிற்கு நல்லது.
  4. வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது. இலேசானது.
  5. சிறிதளவு உஷ்ணமுள்ளது.
  6. கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது. ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.

எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் பயன்படுத்துங்கள்.

உடலில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு காரணம் உண்டு. அந்த காரணத்தை கண்டுபிடித்துச் சரிசெய்வதே நிரந்தர தீர்வைத் தரும்.

 

Recommended Posts

வாழை இலையின் மகத்துவம்

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்டநாள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு ...

Read Article
குடிநீரை பாதுகாக்கும் செம்பு பாத்திரங்கள்

தண்ணீரை செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை...

Read Article
கர்ப்பிணி பெண்களுக்கு பயன்படும் மூலிகைகள்

அத்தி இதன் பழம் இரும்பு சத்தை அதிகரித்து கருவை நன்றாய் வளர்க்கும். மாதுளம் : இதன்...

Read Article
உலர் திராட்சையின் பயன்கள்…!

தினசரி உணவுக்குப் பின்னர் காலை, மாலையில் 25 உலர் திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள்...

Read Article
பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட ...

தங்கள் அம்மா, மனைவி, பெண் குழந்தைகள்.... அவசியம் சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை. சுண்டக்காய். சிவப்பு கொண்டைக்கடலை...

Read Article
புங்கன் மரம் – நம் ...

காற்றில் உள்ள வெப்பத்தையும், மாசுவையும் குறைக்கும். பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும்....

Read Article
பழமொழி வடிவில் உணவு பழக்கமா ...

சீரகம் இல்லா உணவு சிறக்காது. தன் காயம் காக்க வெங்காயம் போதும். வாழை வாழ வைக்கும்....

Read Article
வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம் ...

இரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீருற்றி வைக்கலாம். நீருற்றிய சோறு அதாவது, பழைய...

Read Article
பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ...

பயிர்களின் வளர்ச்சிக்கு  16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் . பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள்...

Read Article
5 ந்தே நிமிடத்தில் சாகக் ...

3 நிமிடம் உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள். ஒரு கூட்டம், இந்தியர்கள் முட்டாள்கள்,...

Read Article
திரிபலாவை பருவ மழைக்காலங்களில் சாப்பிடுவதால் ...

வாழ்க்கை முறை மாற்றங்களால் வயது வந்தோருக்கும் முதியோருக்கும் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் பொதுவானதாக இருக்கிறது. நாகரிக...

Read Article
மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட ...

உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும்...

Read Article
சம்மணமிட்டு சாப்பிடும்போது உடலில் ஏற்படும் ...

அமர்ந்து உணவருந்தும் முறையில் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருகின்றன. முன்பெல்லாம் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடும்...

Read Article
மாற்றம் நிச்சயம்….!! விழித்து கொள்ளுங்கள்.!

வேண்டிய அளவுக் கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.! கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.!...

Read Article
ஜாதிக்காய்

ஜாதிக்காயில் நிறைய ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. இது வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நியாசின், ஃபோலிக்...

Read Article
கிராம்பு

கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும். இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து...

Read Article
கடுக்காய்

கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும்,...

Read Article
அதிமதுரம்

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ளப் பசைப் பொருளும்,...

Read Article
திப்பிலி

திப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர்....

Read Article
மிளகு

மூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். தொண்டை வலிக்குத்...

Read Article
சுக்கு

கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை...

Read Article
திரிகடுகம்

திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல...

Read Article
மக்கள் ஆரோக்கியம்

நமது மரபுவழி விவசாயம் அழிக்கப்பட்டு, நவீன விவசாயம் என்ற பெயரில் ரசாயன உரம், பூச்சிமருந்து ஆகியவற்றால்...

Read Article
15,000 ஆண்டு விவசாய வரலாறு ...

எங்கு பார்த்தாலும் இயற்கை அங்காடிகள். கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. "இங்கே இயற்கை...

Read Article
நாட்டு சர்க்கரை (கவுந்தப்பாடி)

நாட்டு சர்க்கரை இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும்....

Read Article
உடன்குடி கருப்பட்டி

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்....

Read Article
விவசாய குறிப்புகள்

 எலுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போடுவதன் மூலம் செடிகள் நன்றாக செழித்து வளரும், அதேபோல் காயும்...

Read Article
உடல்நலக் குறிப்பு

என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் “நெல்லிக்கனி”.  இதயத்தை வலுப்படுத்த "செம்பருத்திப் பூ".  மூட்டு...

Read Article
மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே ...

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது வேலை பளுவின்...

Read Article
உண்மையை உணர்வோம்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!! அந்த...

Read Article
உடனடியாக மாற வேண்டியவை

நமது உணவு நுகர்வு நடைமுறையில் - உடல் நலத்தின் பொருட்டாக - உடனடியாக மாற்ற வேண்டிய...

Read Article
மதுவை விட பாதிப்பு, பிராய்லர் ...

 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ்,...

Read Article
எந்த நேரத்தில் செல்போனை உபயோகிக்கக் ...

ஏன் உணவு சாப்பிடும்போது தொலைக்காட்சி மற்றும் வேறு கவன ஈர்ப்புக்கள் (மொபைல், நியூஸ் பேப்பர், உரையாடுதல்)...

Read Article
குதிரைவாலி சாகுபடி அதிகரிப்பு

 வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக நெல்லுக்கு மாற்றாக குதிரைவாலி சாகுபடி தென் தமிழகத்தில் வேகமாக...

Read Article
வேர்கடலை கொழுப்பு அல்ல …! ...

நிலக்கடலைக் குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்டுள்ளது....

Read Article
புதினாவின் மருத்துவப் பயன்கள்

 புதினா வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான...

Read Article
இஞ்சியின் மருத்துவப் பயன்கள்

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.  இஞ்சித் துவையல்,...

Read Article
இயற்கை உரமாக தக்கை பூண்டு ...

 தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம்...

Read Article
சுண்டை காய்

சுண்டை காய் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக்...

Read Article
டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட ...

சிறு வெங்காயம் :  சின்ன வெங்காயத்துடன் சாதாரண அச்சுவெல்லம் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் டெங்குவைக்...

Read Article
நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு ...

இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகவோர் தேடி வாங்க துவங்கியுள்ளனர்....

Read Article
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது (GLYPHOSATE ...

 இந்தியாவில் பெரும் தொல்லைகளை உருவாக்கி வந்த இரசாயனத்தை இந்திய அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ளது.  மரபணு மாற்றம்(Genetically...

Read Article
மழை நீரில் குளிக்கும் ஒருவருக்கு ...

 மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு, ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே...

Read Article
சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். சீரகத்தையும், உப்பையும்...

Read Article
வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய ...

வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 15 மூலிகைகளும்! அதன் அற்புதமான மருத்துவ பயன்களும். அந்தக் காலங்களில்...

Read Article
இளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்கள்

இளநீரில் இவ்வளவு விஷயங்களா?   இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம்,...

Read Article

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
March 2018
M T W T F S S
« Feb   Apr »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031