Login

Register

Login

Register

Month: March 2018

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

பாரம்பரிய அரிசி

பிறந்த குழந்தைக்குக் குறைந்தபட்சம் மூன்று மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றுதான் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று அனைத்து வகை மருத்துவர்களும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், இந்த நவீன உலகில் ’எனக்கு பாலே சுரக்கவில்லை டாக்டர்’ என்று சொல்லும் பெண்கள்தான் பெருகி வருகிறார்கள். ’குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுதான் நல்லது’ என்று மனதையும்; இந்த இந்த உணவுகளைச் சாப்பிட்டால் பால் பெருகும்’ என்று உணவு முறைகளையும் மாற்றிக்  கொண்டால்… பால் பொங்கும் என்பதே உண்மை என்கிறது இந்திய...

Learn more

இந்து உப்பு என்றால் என்ன ?

மனிதனுக்கு உப்பு என்ற ஒன்றை தெரிந்திருக்காவிட்டால் அவன் நாடோடி வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக விட்டிருக்க மாட்டான் என்கிறார்கள் மனித பரிணமாத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள். அதாவது மனிதன் சாப்பிடக் கிடைத்த தானியங்களுடன் சேர்த்துக் கொள்ள தேவையான உப்பு எங்கெல்லாம் கிடைத்ததோ, அங்கெல்லாம் புதிய மனித குழுக்கள் தங்கி மனித குடியேற்றங்கள் உருவாகியிருக்கின்றன. கடற்கரையில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் பெரும்பாலும் உப்பை அடிப்படையாக கொண்டவை என்கிறார்கள். இப்படி உப்புக்கு பெரிய வரலாறு இருக்கிறது. உப்பு இல்லாமல் உணவுகள்...

Learn more

கல்யாண முருங்கை

கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாணமுருங்கை இருக்க வேண்டும் என்பது பழமொழி. பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த வரம் கல்யாண முருங்கை. பெண்களுக்கு பெண்தன்மையை அளிக்கும் ஹர்மோன் சுரப்பிகளை சீராக வைத்திருக்கும் சிறப்பான கீரை. பயன்கள் : சுண்ணாம்புச்சத்து, நார்சத்து, இரும்புசத்து மிகுந்தது. கர்ப்ப பிரச்சனைகளை சரிசெய்யும். கருசிதைவிளிருந்து சிசுவைக் காப்பாற்றும். பெண் மலட்டுத் தன்மையை நீக்கும்.  மாதவிடைக் காலத்தில் அதிக வயிற்றுவலி ஏற்படுவதையும், அதிக உதிரிப்போக்கு இருப்பதையும் தடுக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க உதவும்....

Learn more

முசுமுசுக்கை கீரை

மூச்சுப் பிரச்சனைக்கு முசுமுசுக்கை தானாகவே வேலியோரன்களில் வளர்ந்து கேட்பாரற்றுக் கிடக்கும் முசுமுசுக்கைக் கோடி அதிக நன்மைதரும் கீரைகளில் ஒன்று. இளநரை போக்கி எழிலான தொற்றத்தை தரக்கூடியது. பயன்கள் : நோயால் தளர்ந்துபோன உடலை பலமடையச் செய்யும். காய்ச்சலால் ஏற்பட்ட சுவையின்மையை போக்கும். உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். காச நோயயை குணபடுத்தும். வாந்தியை கட்டுப்படுத்தும். சளி, இருமல், இரைப்பைநோய் சலதோஷம் குணமாகும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.  சுவாசப்பையில் உண்டாகும்...

Learn more

குப்பைக்கீரை

குப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு அதிக நன்மைசெய்யும் கீரைகளில் முக்கியமானது. தண்டுக்கீரை வகையைச் சார்ந்தது. குப்பைகள் அதிகம் உள்ள இடங்களில் செழித்து வளர்வதால் குப்பைக்கீரை என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. முற்றிய இலைகளைவிட இளந்தளிர்களே சமைக்க சிறந்தது. பயன்கள் : நார்சத்து மிகுந்தது. வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. குடலை சுத்தப்படுத்தும். மலச்சிக்கலை போக்கும். உடலில் தேங்கியுள்ள கேட்டக்...

Learn more

பிரண்டை

பிரண்டை, நோயால் பிறண்ட வாழ்வை சீராக்கும் ஆற்றல் கொண்டது. முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. எங்கும் எளிதில் கிடைப்பது சதுரப்பிரண்டை, அரியது முப்பிரண்டை.  பயன்கள் : வயிற்றுப் பொருமல் நீங்கும். வாயுத்தொல்லை அகலும். சுவையின்மை போகும். நன்கு பசியெடுக்கும். மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயத்தை பலப்படுத்தும். மூட்டுவலி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு பால்வினை நோய்களுக்கு ஏற்றது....

Learn more

பருப்புக் கீரை

பெண்களின் கீரை என பருப்புக் கீரையை சொல்லலாம். குழந்தைகளுக்கு உணவு தாய்ப்பாலே. அந்த தாய்ப்பால் சுரக்க தேவை பருப்புக் கீரை. ஆம் ! ஜீவனுக்கு ஜீவன் தரும் அதிசயக் கீரை. பருப்புக் கீரையின் பயன்கள் : பாலுட்டும் தாய்மார்களுக்கு சிறந்த ஊட்ட உணவு. பால் வற்றும் நிலையில் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை உண்டு வந்தால் நல்ல பால் சுரப்பு ஏற்படும். பித்தம் அதிகம் உள்ளவர்கள். அடிக்கடி தலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்றது. ஓமேகா 3 வேண்டுமே! நாம்...

Learn more

தண்டுக்கீரை

தண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. எல்லா மண் வளங்களிலும் வளர்த்து உண்ணலாம்! மிக அதிக உயரம் வளரக் கூடிய கீரை இனம். தண்டுகள் பெரிதாக இருக்கும். பச்சை நிறம் மற்றும் சிவப்பு நிறங்களிலும் கிடைகிறது! தண்டுக் கீரைஎவருக்கு நல்லது ?  உஷ்ண உடல்வாகு உள்ளவர்களுக்கு. அதாவது பித்தம் அதிகம் உள்ளவர்கள் அவசியம் உண்ண வேண்டும். இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு தேவையானது தண்டுக்கீரை. சிறுநீர் எரிச்சலுக்கு சிறந்தது. வெள்ளைப்படும் பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டும். வாயிற்று கடுப்புக்கு சிறந்தது....

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
March 2018
M T W T F S S
« Feb   Apr »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031