Login

Register

Login

Register

Month: January 2018

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

கிச்சலி சம்பா

கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற இரகமாக உள்ள இது, சம்பா பருவத்தில் (ஆகஸ்ட்  தமிழ் ஆடி மாதத்தில்) பயிரிடப்படும் பாரம்பரிய நெல் இரகமாகும். நூற்று முப்பத்து ஐந்து நாளில் அறுவடைக்கு வரக்கூடிய இவ்வகை நெற்பயிர்கள், நாலரை அடி வரை வளரும் தன்மை கொண்டது. சன்ன இரகமாக உள்ள இதன் அரிசி, வெண்ணிறமாகக் காணப்படுகிறது பொதுவாக, பலனளிக்காத வெள்ளை, மற்றும் சன்ன (மெலிந்த) இரக அரிசியை விரும்பிச் சாப்பிட நாம் பழகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆரோக்கியத்துக்குப் சத்து...

Learn more

கருங்குறுவை

கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது. சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக், இந்த கருங்குறுவையின் அரிசிப் பயன்படுத்தப்படுகிறது. அரிசிக்கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற இரகமாக உள்ள இதன், நெல் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது. கருங்குறுவை நெல் மணிகள் ஒரு ஆண்டு முழுவதும் பூமியில் கிடந்தாலும், மக்கிப்போகாமல் ஒரு ஆண்டுக்குப் பிறகும் முளைக்கும் திறன் உடையது. இந்த நெல் இரகம், தமிழகம் தவிர கர்நாடகம், கேரள மாநிலங்களில்...

Learn more

தூயமல்லி

தூயமல்லிப் பாரம்பரிய நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும் இந்நெல் இரகம், வெள்ளைக் கலந்த மஞ்சள் நிறமாகவும், தூய்மையாகவும் காணப்படுகின்றது. பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள இந்த தூயமல்லி நெல்லின் அரிசி, வெள்ளை நிறம் கொண்ட மிகச் சன்ன இரகமாக உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் தூயமல்லி அரிசியை (சோறு) மிகவும் விரும்பி சாப்பிட்டதுடன், இந்த நெல் இரகத்தைப் பயிர் செய்ய உழவர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர். இந்த தூயமல்லி நெல்லை சாகுபடி செய்து அதிக மகசூல்...

Learn more

காட்டுப் பொன்னி

காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட சிறந்த இராகமான இது, மானாவாரி மற்றும் மேட்டுப் பகுதிகளில் தோப்பாக உள்ள தென்னை, வாழை, சப்போட்டாப் போன்ற சாகுபடி நிலங்களில் ஊடுபயிராகக் காட்டுப் பொன்னியைப் பயிரிடப்படுகிறது. 140 நாள் வயதுடைய இவ்வகை நெல்லும் அரிசியும், சிவப்பு நிறத்தில் உள்ள மோட்டா (தடித்த) இரகமாகும். அதிகச் செலவில்லாமல் எளிய முறையில் சாகுபடி செய்ய ஏற்ற நெல் இராகமான இது, ஒரு மாதம் வரையிலும் தண்ணீர் தேவையின்றி வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதாகும்....

Learn more

குருவிக்கார்

குருவிக்கார் பாரம்பரிய நெல் இரகங்களில் அதிக மகசூல் தரக்கூடிய நெல் இரகமாகும். இது பழுப்பு நிற அரிசியுடனான, மோட்டா (தடித்த) இரகமாகும். ஏனையப் பாரம்பரிய நெல் இரகங்களைப் போலவே வெள்ளம், வறட்சிப் போன்றவற்றைத் தாங்கி வளரக்கூடியக் குருவிக்கார் நெல், இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் எடுத்துக்கொண்டு வளரும் தன்மையுடையது. இவ்வகை நெற்பயிரில் சொரசொரப்புடனான கடினத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சித் தாக்குதலிருந்து காக்கப்படுவதோடு, களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு இருபத்தைந்து முதல் முப்பது மூட்டைவரையில் மகசூல் கிடைக்கக்கூடிய...

Learn more

காலா நமக்

காலா நமக் அல்லது காளான்நமக் (Kalanamak) என்னும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். இந்தியாவின் சிறந்த மற்றும் நறுமணம் மிகுந்த நெல் வகையான இது, புத்தக் காலமான கி. மு 6 ஆம் நூற்றாண்டு (600 BC) முதலே சாகுபடிச் செய்யப்பட்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது. கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் இமாலய பகுதியில் உள்ள தெராய் நிலப்பரப்பில் பிரதானமாக விளைவிக்கப்பட்ட இந்நெல் இரகம், 1998 – 1999 ஆண்டுகளில் ஏற்பட்ட இதன் பூங்கொத்து வெடிப்பும்,...

Learn more

தேங்காய்ப்பூ சம்பா

தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே மிகவும் வித்தியாசமான நெல் இரகமான இது, மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையேயான இந்திய எல்லையின் ஓரமாக இச்சா ஆறு பாயும் பகுதியில் தேங்காய்ப்பூ சம்பா என்ற இந்த பாரம்பரிய நெல் இரகம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. வங்க மொழியில் வேறுபெயரில் அழைக்கப்படும் இவ்வகை நெல், பொரி தயாரிப்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பிரபலமான இந்த நெல் இரகம், தமிழகத்திலும் சோதனை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டது. மணல்,...

Learn more

சீரகச் சம்பா

சீரகச் சம்பா பாரம்பரிய நெல் இரகங்களில் ஒன்றாகும். சீரகம் எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாகக் காணப்படுவதால், இந்த நெல்லுக்கு “சீரகச் சம்பா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நெல்லின் அரிசி பிரியாணிகள் செய்ய ஏற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பண்டைய நெல்வகைகளில், சீரகச்சம்பா தரத்திலும், விலையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அரிசியின் சோறு மருத்துவப் பயனுடையது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்படும் இந்த நெல் இரகம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் பெருமளவில்...

Learn more

குள்ளக்கார்

குள்ளக்கார் (Kullakar) பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்றான இது, இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் வகையைச் சார்ந்த இது, சுகாதார நலன்கள் நிறைந்த, பல்வேறு சிவப்பு நிற அரிசி இரகங்களில் ஒன்றாகும். குறுகியகால நெற்பயிராக உள்ள இது, ஆண்டு முழுவதும், அனைத்துப் பட்டங்களிலும் (3 பருவங்கள்) பயிர் செய்ய ஏற்றதாகும். மேலும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக்கொண்டது. பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இந்நெல், உப்பு மண், உவர்...

Learn more

வெள்ளைப்பொன்னி

வெள்ளைப்பொன்னி பண்டைய, மற்றும் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். இது, தமிழ்நாட்டின் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ள நெல் இரகமாகும். ‘வெள்ளைப்பொன்னி’ என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நெடுங்காலத்திற்கு முன்பு, விவசாயிகளால் பல்வேறு பொன்னி நெல்லிருந்து பிரித்தறிந்து உருவாக்கப்பட்டவையாகும். 120 – 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய மத்தியகால நெல் இரகங்களில் ஒன்றான வெள்ளைப்பொன்னி, ஜூலை மாதம் முதல், ஆகஸ்ட் மாதம் வரையிலான முன் சம்பா பருவத்திலும் (பட்டம்), பிசாணம், பின் பிசாணம் எனப்படும், செப்டம்பர் மாதம்...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
January 2018
M T W T F S S
« Dec   Feb »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031