Login

Register

Login

Register

Month: January 2018

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

வல்லாரை கீரை

வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும். இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். வல்லாரை கீரையின் பயன்கள் :  வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார்...

Learn more

திரிபலாவை பருவ மழைக்காலங்களில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வாழ்க்கை முறை மாற்றங்களால் வயது வந்தோருக்கும் முதியோருக்கும் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் பொதுவானதாக இருக்கிறது. நாகரிக வளர்ச்சி மற்றும் பரபரப்பான வாழ்க்கை சூழல் நமது உணவுமுறைகளில் கூட மிகத்தீவிரமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உணவு பழக்கங்களில் ஏற்படும் மாற்றமானது, உடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான இயக்கத்தை பயங்கரமாக பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில், நமது உடலின் ஆரோக்கியம் காக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதிலும் ஜீரண மண்டலத்தின் நலத்தை பாதுகாப்பது மிக முக்கியம். நல்ல செரிமான திறனை வளர்க்க...

Learn more

கருடன் சம்பா

கருடன் சம்பா பாரம்பரிய நெல் வகையைச் சார்ந்த இது, அனைத்து தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகையாகும். கருடன் (கழுகு) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் காணப்படுவதால் இந்நெல்லுக்கு அப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய இந்த நெல் இரகம், நான்கடி உயரம் வரை வளரக்கூடியது. இந்த கருடன் சம்பா சாப்பாட்டிற்கும், மற்றும் பலகாரங்களுக்கும் ஏற்ற இரகமாகக் கருதப்படுகிறது....

Learn more

மாப்பிள்ளை சம்பா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் கிரியேட், நமது நெல்லைக் காப்போம் அமைப்புகள் சார்பில் 2 நாள் நடந்த தேசிய அளவிலான நெல் திருவிழா நேற்று நிறைவடைந்தது. மண் வளமும், மேம்பாடும் என்ற தலைப்பில் கோவில்பட்டி வேளாண் அலுவலர் பூச்சிச் செல்வம் பேசுகையில், இந்தியாவில் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இவற்றையெல்லாம் ரசாயன உரங்களின் வரவால் நாம் இழந்து விட்டோம். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியை...

Learn more

தங்கச் சம்பா

தங்கச் சம்பா  பட்டத்துக்கு (தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் வரை, சம்பா பட்டம்) ஏற்ற பாரம்பரிய நெல் வகையான இது, நூற்றி முப்பது நாட்களிலிருந்து, இருநூறு நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஆடிப்பட்டத்தில் சாகுபடிச் செய்ய ஏற்ற இரகமான தங்கச் சம்பா, ஐந்தடி வரை வளரும் மோட்டா (தடித்த) இரகமாகும். மத்திய காலப் பயிராகக் கருதப்படும் இப்பயிர், இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியதாகும். தங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம் போல் மிளிரும் தன்மைக் காணப்படுவதால், இந்த...

Learn more

குடவாழை

குடவாழை அல்லது குடைவாழை பாரம்பரிய நெல் வகைகளில் முக்கிய இடம்பிடித்துள்ள இந்த நெல் இரகம், இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரவும், உவர் நிலத்தைத் தாங்கி வளரவும், கடலோரப் பகுதியில் கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடிச் செய்யவும் ஏற்ற இரகமாகும். தமிழகத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் வட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. அந்த வகைகளில், இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம் வேதாரண்யம் உழவர்களிடம் இன்றைக்கும் உள்ளது குடைவாழை என்றழைக்கப்படும் இந்நெல்...

Learn more

வரப்புக் குடைஞ்சான்

வரப்புக் குடைஞ்சான் அல்லது வரப்புக்குடைந்தான் என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ‘சத்திரகுடி’ எனும் நாட்டுப்புற பகுதியில் பிரதானமாகப் பயிரிடப்படுகிறது. இது மூன்று மாத காலப் பயிராகும். ஒரு ஏக்கருக்கு சுமார் 1000 கிலோ முதல், 1200 கிலோ வரையில் மகசூல் தரக்கூடிய இந்த நெல் வகை, கேரளா மாநிலத்தில் அதிக விலையாக ரூபாய் (र) 7.50/கிலோ விலையைப் பெறுகிறது. இவ்வகை நெற்பயிர்களின் வேர்கள் வரப்பு முகடுகளை ஊடுருவி...

Learn more

பிசினி

பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக் கொண்ட இரகமாகும். நூற்றி இருபது நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். இந்த வகை நெல்லின் அரிசி மோட்டாவாகவும், சிவப்பு நிறமும் கொண்டது. எவ்வகை மண்ணையும் ஏற்று வளரக்கூடிய இந்நெல் இரகம், ஐந்தடி உயரம்வரை வளரும் தன்மையுள்ளது. கடும் வறட்சியையும், அதேநேரம் பெருவெள்ளத்தையும் தாங்கிச் செழிக்கும் இது, ஒரு ஏக்கருக்கு சுமார் 28 மூட்டை (75 கிலோ மூட்டை) வரை மகசூல் கொடுக்கக்கூடியதாகும். நேரடி விதைப்புக்கும், மற்றும்...

Learn more

மைசூர் மல்லி

மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, தமிழகத்திலும் பரவலாகச் சாகுபடிச் செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பிரசித்திப் பெற்ற இந்நெல் வகை, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச் செய்யப்பட்ட ஒன்றாகக்  கூறப்படுகிறது. தமிழக காவிரிக் கழிமுகப் பகுதியில் இருமடங்கு மகசூல் கொடுக்கும் மைசூர் மல்லி, நூறு ஆண்டுகளுக்கு மேலாக சேலம், மற்றும் தருமபுரி மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்துவருகின்றனர். மைசூர் மல்லி மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகவும், சத்து மிகுந்ததாகவும் கருதப்படுகிறது. சாதம் வடித்த...

Learn more

காட்டுயானம்

காட்டுயானம் நெடுங்காலமாகப் பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களைவிட கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும். ஏழு அடி உயரம் வரை வளரும் காட்டுயானம், யானையையும் மறைக்கக்கூடிய அளவிற்கு வளர்கிறது. (அதனாலேயே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது) பயன்கள்: ஏனையப் பாரம்பரிய நெல் வகைகளில், காட்டுயானம் கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது.  இதன் அரிசியை...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
January 2018
M T W T F S S
« Dec   Feb »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031