Login

Register

Login

Register

மக்கள் ஆரோக்கியம்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

மக்கள் ஆரோக்கியம்

நமது மரபுவழி விவசாயம் அழிக்கப்பட்டு, நவீன விவசாயம் என்ற பெயரில் ரசாயன உரம், பூச்சிமருந்து ஆகியவற்றால் நமது மண்ணே விஷமாகி இருக்கிறது. இதனால் அந்த மண்ணில் விளையும் உணவுப் பொருட்களிலும் இந்த ரசாயனங்களின் தாக்கம் இருக்கிறது. 60 கிலோ எடையுள்ள ஒருவரது உடலில், நாள்தோறும் 0.48 மில்லி கிராம் வரை பூச்சிக் கொல்லி மருந்து சேர்ந்தால் பாதகம் இல்லை என மத்திய வேளாண்மை அமைச்சகத்தால் அளவிடப்பட்டுள்ளது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் ரசாயனங்களை உட்கொள்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதற்கு காரணம், விதைகளைப் பதப்படுத்துவதில் துவங்கி, சந்தைக்கு விற்பனைக்கு வரும் வரை பல்வேறு கட்டங்களில், உணவுப் பொருட்களில் ரசாயனப் பொருட்களும், பூச்சி மருந்துகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சேர்க்கப்படுகின்றன. உதாரணமாக, இந்தியாவில் உற்பத்தியாகும் 10 கோடி டன் காய்கறிகளை, பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க, 6,000 டன் பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது, சர்வதேச அளவுடன் ஒப்பிட்டால் 70 சதவீதம் அதிகம். இந்தியாவில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்களில், ரசாயனப் பொருள்களின் அளவு, அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் உள்ளதாக, உலக காய்கறி மையம் எச்சரித்துள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களில் மட்டுமே இந்த கணக்கு என்றால், மற்ற உணவுப்பொருட்களில் கணக்கிட்டால் தலைசுற்றி கீழே விழுந்துவிடுவோம்.

மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:

 • தரம்
 •  சுத்தம்
 •  சுகாதாரம்
 • ஆரோக்கியம்
 •  நஞ்சில்லா உணவு
 •  நோயற்ற எதிர்கால தலைமுறை

இப்போதெல்லாம் பிறந்த உடனேயே விஷயத்தை தான் குடிக்க கொடுக்கிறோம். புரியவில்லையா? :

 •  பிறந்த குழந்தைக்கு வெள்ளைச் சர்க்கரை எனும் ரசாயனத்தைத்தான் தண்ணீரில் கலந்து கொடுக்கிறோம்.
 • அப்போது முதல் கொஞ்சம் கொஞ்சமாக நச்சு கலந்த உணவுகளைதான் தொடர்ந்து சாப்பிட்டு வருகிறோம்.

இன்றைய ஆரோக்கியம்? :

 •  ஆனால், இன்றைய நிலவரம் குழந்தைகளுக்கு கூட நீரிழிவு, இதய நோய் என பல பாதிப்புகள்!
 •  ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், நீரிழிவு, இதயநோய், மூட்டுவலி, முதுகுவலி… இவையெல்லாம், முதுமை பாதிப்பு நோய்கள் என்பது, இரு தலைமுறைகளுக்கு முன்பு இருந்த நிலவரம்.
 •  நமது கொள்ளு தாத்தா – கொள்ளு பாட்டிக்கு, 80 வயதுக்கு மேல்தான் நீரிழிவு, இதயநோய், நுரையீரல் பாதிப்பு போன்ற முதுமை பாதிப்பு நோய்கள் தலைகாட்டின.
 •  நமது தாத்தா – பாட்டிக்கு, 60 வயதுக்கு மேல் இந்த பாதிப்புகள் வந்தன. நமது அம்மா – அப்பாவுக்கு, 40 வயதிலேயே இந்த நோய்கள் வந்துவிட்டன. நம்மை, 20 வயதுக்குள்ளாகவே இவை பாதிக்கின்றன.
 •  உடல் உழைப்பு குறைந்ததால் வரும் பாதிப்புகளை ஈடுகட்டும் மாற்று வழியாக, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் இன்றைய தலைமுறை ஆர்வம் வளர்த்து ஓரளவு சமாளித்து வருகிறது. ஆனால், உணவு முறையில் இந்த மாற்று வழி பின்பற்றப்படவில்லை. அதனால்தான், நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டாலும் நோய் பாதிப்புகள் ஓயவில்லை. உடலில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால்தான், ஆரோக்கியமான இளமைத்தன்மை இருக்கும்.
 •  பாரம்பரிய இயற்கை உணவு முறையில், உணவுப்பொருட்களே ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடல்பாகங்களை வலுப்படுத்தும் மருந்துப் பொருட்களாகவும் இரட்டை பலன் அளிக்கிறது. இதனால்தான், இயற்கை உணவு முறையைப் பின்பற்றிய அன்றைய தலைமுறை, முதுவயதிலும் ஆரோக்கியமான இளமைத்தன்மையோடு இருந்தது.

சுக்கு கருப்பட்டி உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் குறைய நீங்களே காரணமாக இருக்கலாமா?

 •  நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். நீங்களும் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்.
 •  நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளுக்கும் சிறுதானியங்களில் செய்யப்பட்ட உணவுகளை கொடுங்கள். நோயற்ற, எதிர்கால தலைமுறையை உருவாக்குவோம்.

அன்றைய தலைமுறை, ஆரோக்கியமாகத் துடிப்புடன் இருந்தது ஏன்? இன்றைய தலைமுறை நோயாளியாகத் தேய்ந்திருப்பது ஏன்? :

 •  இதற்கு திட்டவட்ட பதில் : இயற்கையான, ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய உணவுமுறையை கைவிட்டு, செயற்கையான, ஊட்டச்சத்து இல்லாத உணவுமுறைக்கு மாறியதுதான்.
 •  ஆரோக்கியத்துக்கு, உணவு முறையும், உடல் உழைப்பும் அவசியம். இந்த இரண்டிலும், இந்தியப் பாரம்பரியம் சிறப்பு கவனம் செலுத்தியிருக்கிறது. ஆனால், இப்போதைய வாழ்க்கை முறை மாற்றத்தால் இரண்டும் குளறுபடியாகிவிட்டன. இன்றைய தலைமுறை அப்படி இல்லை. அதனால் தான் இவ்வளவு பிரச்சனைகளும்.
 • புது புது நோய்கள், புது புது சிகிச்சை முறைகள், புது புது கருவிகள், புது புது கட்டணங்கள். இந்த நிலையை மாற்றும் முயற்சியில் நாங்கள் இப்போது களம் இறங்கி இருக்கிறோம். எங்களை ஆதரியுங்கள். எங்களை உற்சாகப்படுத்துங்கள். எங்களோடு இணைந்திருங்கள். நோயில்லா சமுதாயத்தை நோக்கி நாம் இணைந்தே பயணப்படுவோம்.

ஏன் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தக்கூடாது தெரியுமா? :

 •  சர்க்கரை-மெல்ல கொல்லும் விஷம் என்றால், அது மிகையாகாது. இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை ஏதாவது ஒரு வகையில் சர்க்கரையை சேர்த்து நாம் சாப்பிடுகிறோம்.
  இப்படித் தயாரான சர்க்கரையில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
 •  இந்த வெள்ளை சர்க்கரையை எப்படித் தயார் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால், இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
 •  கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில், பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
 •  பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
 •  இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
 • 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தப்படுவதால் நல்ல விட்டமின்களை அழிந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
 •  அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
 • சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த இரசாயன பானங்கள் தயாரிக்கப்படுகிறது.
 •  மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சர்க்கரையில் கலந்துவிடுகிறது

இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? :

 •  தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
 •  பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இந்த வெள்ளை சர்க்கரை தான் பிரதான காரணியாக அமைகின்றது.

ரீஃபைண்டு எண்ணெய் :

 •  ரீஃபைண்டு அப்படிங்கிற தயாரிப்பு முறையில வர்ற எண்ணெய்கள்ல நமக்குக் கிடைக்கிற நன்மைகளைவிட, தீமைகள் தான் அதிகம்! ஒரு எண்ணெயை, வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி பல கட்டங்களா சுத்திகரிக்கும்போது, அதோட தன்மையே மாறிப்போறதோட, சத்தும் நீங்கிடுது.
 • முன்பு நல்லெண்ணெய் தயாரிக்கறதுக்கு செக்கில் எள்ளை ஆட்டும்போது, எள்ளிலிருந்து எண்ணெயைப் பிரிக்கறதுக்காக கருப்பட்டியைச் சேர்த்தாங்க. இப்போ ‘எக்ஸெலர்ங்கற இயந்திரம் மூலமா எண்ணெய் எடுக்கிறாங்க. இதுல கருப்பட்டிக்குப் பதிலா, சர்க்கரை ஆலைக் கழிவைப் பயன்படுத்துறாங்க.
 •  இது எண்ணெயோட குணங்களை மாத்திடுது. செக்குல ஆட்டுற எண்ணெயை வடிகட்டும்போது, கசடுகள் மட்டும்தான் நீக்கப்படும். ஆனா, இந்த ‘ரீஃபைனிங்’ முறையில கசடுகளோட சேர்ந்து சத்துக்களும் வடிகட்டப்படுது.

வியாபார நோக்கம் :

 •  வியாபார நோக்கத்தோட, ‘ரீஃபைண்டு பண்ணாத எண்ணெய்கள் உடலுக்குக் கேடு’னு சொல்லிச் சொல்லியே மக்களைப் பயமுறுத்திவிட்டார்கள். கொலஸ்ட்ராலுக்குப் பயந்து ரீஃபைண்டு ஆயிலுக்கு மாறினதால என்ன பலன் கிடைத்துவிட்டது?
 •  இவர்கள் சொல்வது உண்மை என்றால் இதய நோய்களும், உடல் பருமன் நோயும், கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்ட நோய்களும் குறைந்தல்லவா இருக்க வேண்டும்? ஆனால், உண்மை நிலை என்ன? முன்னை விட பல மடங்கு இந்த நோய்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது. 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருகிறது.

தேங்காய் எண்ணெய் :

 •  தேங்காய் எண்ணெய் தயாரிப்புக்கான கொப்பரைகளைக் காயவைக்கும்போது, அதுல சட்டுன்று பூஞ்சை படர்றது நிறைய வாய்ப்பு உண்டு. இப்படி பூஞ்சை படர்ந்துட்டா… அதைப் பயன்படுத்த முடியாது.
 •  அதனால கவனமா கொப்பரைகளைக் காயவெச்சு எடுக்கணும். பூஞ்சை படர்ந்திருந்தா, அதையெல்லாம் நீக்கணும். ஆனா, இதுக்கெல்லாம் பொறுமை இல்லாம, கொப்பரை களோட மேற்பரப்புல கந்தகத்தைத் தடவி காயவைக்க ஆரம்பிச்சாங்க.
 • இப்ப கிட்டத்தட்ட பொதுவான வழக்கமாவே மாறிடுச்சு. கந்தகம் என்ற வீரியமான ஒரு வேதிப்பொருள். இதைக் கலந்து தயாரிக்கப்படுற எண்ணெயை உங்க தலையில தேய்த்தால் முடி வளருமா… முடிகொட்டுமா?”

கொழுப்பு அதிகமா? :

 •  தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம் என்று பலரும் ஒதுக்கி வைக்கிறாங்க. ஆனா, கேரளாவில் பெரும்பான்மையான மக்கள் தேங்காய் எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துறாங்க. இதயநோயால் பாதிக்கப்படுபவர்கள் மற்ற மாநிலத்தைவிட, கேரளத்தில் அதிகமாக இல்லை என்று ஆய்வுகள் சொல்கிறது.
 •  இதிலிருந்தே தெரிஞ்சுக்கலாம், நன்மைகள் பலவும் அடங்கியிருக்கிற தேங்காய் எண்ணெயை, உணவில் சேர்க்கக்கூடாது என்கிறது. எந்த அளவுக்கு தவறான கருத்து!

செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் :

 •  நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்., நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்., மணமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.
 •  இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், துப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ” இ “போன்றவை நமக்கு கிடைத்து வந்தன. இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

ஏன் ரீபைண்ட் எண்ணெய்யை பயன்படுத்தக்கூடாது தெரியுமா? :

 •  ரீபைண்ட் எண்ணெய்( Refined oil) – மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison ) என்கிறார்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர்கள். ரீபைண்ட் எண்ணெய் பயன்படுத்தாதீங்க! நோயை விலை கொடுத்து வாங்காதீங்க என்பதுதான் அவர்களது வேண்டுகோள்.
 •  நாமெல்லாம் நினைப்பது போல ரீபைண்ட் எண்ணெய் என்றால், சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லை. சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய்.

ரீபைண்ட் எண்ணெய் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? :

 •  மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள் பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்க
 •  இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் ” சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் ” என்று நினைத்து ரீஃபைண்ட் எண்ணெய் உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
 • எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் எண்ணெய். இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோகியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்திக் கொள்கிறோம்.

Recommended Posts

வாழை இலையின் மகத்துவம்

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்டநாள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு ...

Read Article
குடிநீரை பாதுகாக்கும் செம்பு பாத்திரங்கள்

தண்ணீரை செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை...

Read Article
கர்ப்பிணி பெண்களுக்கு பயன்படும் மூலிகைகள்

அத்தி இதன் பழம் இரும்பு சத்தை அதிகரித்து கருவை நன்றாய் வளர்க்கும். மாதுளம் : இதன்...

Read Article
உலர் திராட்சையின் பயன்கள்…!

தினசரி உணவுக்குப் பின்னர் காலை, மாலையில் 25 உலர் திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள்...

Read Article
பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட ...

தங்கள் அம்மா, மனைவி, பெண் குழந்தைகள்.... அவசியம் சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை. சுண்டக்காய். சிவப்பு கொண்டைக்கடலை...

Read Article
இந்து உப்பு என்றால் என்ன ...

மனிதனுக்கு உப்பு என்ற ஒன்றை தெரிந்திருக்காவிட்டால் அவன் நாடோடி வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக விட்டிருக்க மாட்டான்...

Read Article
புங்கன் மரம் – நம் ...

காற்றில் உள்ள வெப்பத்தையும், மாசுவையும் குறைக்கும். பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும்....

Read Article
பழமொழி வடிவில் உணவு பழக்கமா ...

சீரகம் இல்லா உணவு சிறக்காது. தன் காயம் காக்க வெங்காயம் போதும். வாழை வாழ வைக்கும்....

Read Article
வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம் ...

இரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீருற்றி வைக்கலாம். நீருற்றிய சோறு அதாவது, பழைய...

Read Article
பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ...

பயிர்களின் வளர்ச்சிக்கு  16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் . பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள்...

Read Article
5 ந்தே நிமிடத்தில் சாகக் ...

3 நிமிடம் உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள். ஒரு கூட்டம், இந்தியர்கள் முட்டாள்கள்,...

Read Article
திரிபலாவை பருவ மழைக்காலங்களில் சாப்பிடுவதால் ...

வாழ்க்கை முறை மாற்றங்களால் வயது வந்தோருக்கும் முதியோருக்கும் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் பொதுவானதாக இருக்கிறது. நாகரிக...

Read Article
மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட ...

உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும்...

Read Article
சம்மணமிட்டு சாப்பிடும்போது உடலில் ஏற்படும் ...

அமர்ந்து உணவருந்தும் முறையில் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருகின்றன. முன்பெல்லாம் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடும்...

Read Article
மாற்றம் நிச்சயம்….!! விழித்து கொள்ளுங்கள்.!

வேண்டிய அளவுக் கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.! கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.!...

Read Article
ஜாதிக்காய்

ஜாதிக்காயில் நிறைய ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. இது வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நியாசின், ஃபோலிக்...

Read Article
கிராம்பு

கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும். இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து...

Read Article
கடுக்காய்

கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும்,...

Read Article
அதிமதுரம்

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ளப் பசைப் பொருளும்,...

Read Article
திப்பிலி

திப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர்....

Read Article
மிளகு

மூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். தொண்டை வலிக்குத்...

Read Article
சுக்கு

கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை...

Read Article
திரிகடுகம்

திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல...

Read Article
15,000 ஆண்டு விவசாய வரலாறு ...

எங்கு பார்த்தாலும் இயற்கை அங்காடிகள். கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. "இங்கே இயற்கை...

Read Article
நாட்டு சர்க்கரை (கவுந்தப்பாடி)

நாட்டு சர்க்கரை இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும்....

Read Article
உடன்குடி கருப்பட்டி

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்....

Read Article
விவசாய குறிப்புகள்

 எலுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போடுவதன் மூலம் செடிகள் நன்றாக செழித்து வளரும், அதேபோல் காயும்...

Read Article
உடல்நலக் குறிப்பு

என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் “நெல்லிக்கனி”.  இதயத்தை வலுப்படுத்த "செம்பருத்திப் பூ".  மூட்டு...

Read Article
மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே ...

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது வேலை பளுவின்...

Read Article
உண்மையை உணர்வோம்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!! அந்த...

Read Article
உடனடியாக மாற வேண்டியவை

நமது உணவு நுகர்வு நடைமுறையில் - உடல் நலத்தின் பொருட்டாக - உடனடியாக மாற்ற வேண்டிய...

Read Article
மதுவை விட பாதிப்பு, பிராய்லர் ...

 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ்,...

Read Article
எந்த நேரத்தில் செல்போனை உபயோகிக்கக் ...

ஏன் உணவு சாப்பிடும்போது தொலைக்காட்சி மற்றும் வேறு கவன ஈர்ப்புக்கள் (மொபைல், நியூஸ் பேப்பர், உரையாடுதல்)...

Read Article
குதிரைவாலி சாகுபடி அதிகரிப்பு

 வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக நெல்லுக்கு மாற்றாக குதிரைவாலி சாகுபடி தென் தமிழகத்தில் வேகமாக...

Read Article
வேர்கடலை கொழுப்பு அல்ல …! ...

நிலக்கடலைக் குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்டுள்ளது....

Read Article
புதினாவின் மருத்துவப் பயன்கள்

 புதினா வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான...

Read Article
இஞ்சியின் மருத்துவப் பயன்கள்

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.  இஞ்சித் துவையல்,...

Read Article
இயற்கை உரமாக தக்கை பூண்டு ...

 தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம்...

Read Article
சுண்டை காய்

சுண்டை காய் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக்...

Read Article
டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட ...

சிறு வெங்காயம் :  சின்ன வெங்காயத்துடன் சாதாரண அச்சுவெல்லம் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் டெங்குவைக்...

Read Article
நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு ...

இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகவோர் தேடி வாங்க துவங்கியுள்ளனர்....

Read Article
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது (GLYPHOSATE ...

 இந்தியாவில் பெரும் தொல்லைகளை உருவாக்கி வந்த இரசாயனத்தை இந்திய அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ளது.  மரபணு மாற்றம்(Genetically...

Read Article
மழை நீரில் குளிக்கும் ஒருவருக்கு ...

 மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு, ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே...

Read Article
சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். சீரகத்தையும், உப்பையும்...

Read Article
வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய ...

வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 15 மூலிகைகளும்! அதன் அற்புதமான மருத்துவ பயன்களும். அந்தக் காலங்களில்...

Read Article
இளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்கள்

இளநீரில் இவ்வளவு விஷயங்களா?   இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம்,...

Read Article

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
January 2018
M T W T F S S
« Dec   Feb »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031