Login

Register

Login

Register

நாட்டு சர்க்கரை (கவுந்தப்பாடி)

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

நாட்டு சர்க்கரை (கவுந்தப்பாடி)


நாட்டு சர்க்கரை இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். நாட்டு சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. காலங்களை வென்ற ஊத்துக்குளி’ நெய், ‘சேலம்’ மாம்பழம், ‘பண்ருட்டி’ பலா, ‘மணப்பாறை’ முறுக்கு… என ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வரிசையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் தித்திப்பான பெருமை கொண்டது, ‘கவுந்தப்பாடி’ நாட்டுச் சர்க்கரை. ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது அந்த இனிப்பு ஊர்! ஊருக்குள் நுழையும்போதே நாசி வழியாக நுழைகிறது, சர்க்கரைப் பாகின் நறுமணம். கரும்பை ஆலையிலிட்டு அரவை செய்வது, அரைத்தக் கரும்புப்பாலைக் கொப்பரையில் கொதிக்க வைப்பது…… மரத்துல் செய்த செக்கு மாதிரியான ஆலையில் கரும்பை நசுக்கி, பெரிய பெரிய மண் மொடாக்களில் நிரப்பி வைப்பார்கள். பிறகு, காது வைத்த பெரிய செப்புக் கொப்பரைகளில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சுவாங்க. பாகு பதத்திற்க்கு வந்ததும் ஆறவைத்து ‘தேய்ப்பு முட்டி’ என்று சொல்லும் மர முட்டிகளை வைத்து, கட்டிகளை உடைத்து, தேய்ச்சுப் பொடியாக்குவாங்க.

மறந்து போன பழக்கம் :

  •  ”தமிழ்நாட்டைப் பொருத்தவரை நாட்டுச் சர்க்கரைச் சந்தை என்றால், அது கவுந்தப்பாடிதான். முகலாயர் ஆட்சிக்கு முன்ன இருந்தே இங்க சர்க்கரைத் தயாரிப்பு நடந்திட்டிருக்கு.
  •  பழனி பஞ்சாமிர்தத்தில் கலக்குற நாட்டுச் சர்க்கரை, இங்க இருந்துதான் போகுது. சீசன் காலத்துல, வாரத்துக்கு 15 ஆயிரம் மூட்டை அளவுக்கு வெளியூர்களுக்குப் போகும்.
  •  கொஞ்ச வருடத்திற்கு முன்ன வரைக்கும் எல்லா வீட்டுலையும் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தினாங்க. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்குச் சாப்பாட்டு இலையில் சர்க்கரைப், பழம் வைக்கும் வழக்கம் இருந்தது.
  • அதிரசம், லட்டு, பணியாரம்னு பலகாரங்கள்கூட இதுலதான் செய்வாங்க. கோடைக் காலத்தில் தண்ணீர் பந்தலில் நாட்டுச் சர்க்கரையுடன் புளிக்கரைசல் கலந்த ‘பானகம்’ கொடுப்பாங்க. இப்ப அந்தப் பழக்கமெல்லாம் மறைஞ்சுட்டு வருது”.

இதுல கலப்படம் இல்லை ! :

  • ”நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு ரசாயனம் கலந்த அஸ்கா சர்க்கரையை (சீனி) வாங்கி பயன்படுத்த மக்கள் பழகிட்டாங்க. இதனால் வயிறு சம்பந்தமான நோய், வயிறு எரிச்சல் ஏற்படுது.
  • சில கலப்படக்காரங்க அஸ்காவோட, அதேமாதிரி இருக்கும் செயற்கைத் துகள்களையும் கலக்கறாங்க. ஆனால், நாட்டுச் சர்க்கரையில் எந்தக் கலப்படமும் கிடையாது. மூன்று வருடம் வரைக்கும்கூட கெட்டுப் போகாது.
  • வளரும் குழந்தைகளுக்கு பாலில் நாட்டுச் சர்க்கரையைக் கலந்து தினமும் தூங்கப் போறதுக்கு முன் ஒரு டம்ளர் கொடுத்தால்… வயிறு சம்பந்தமான எந்த நோயும் அண்டாது. உடம்பும் ஊக்கமாகும்”
மருத்துவ பயன்கள் :
  •  கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும்.
  •  இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.
  • நாட்டுச் சர்க்கரை வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் நாட்டுச் சர்க்கரை தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவை தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
100 கிராம் நாட்டு சர்க்கரையில் அடங்கியுள்ள சத்துக்கள் :
சக்தி 383 கலோரிகள் ஈரப்பதம் 3.9 கிராம்
புரதம் 0.4 கிராம்

தாதுக்கள் 0.6 கிராம்
கொழுப்பு 0.1 கிராம் இரும்பு 2.64 மில்லி கிராம்
எரியம் (phosphorus) 40 மில்லி கிராம்சுண்ணம் (calcium) 80 மில்லி கிராம்
மாவுச்சத்து (carbohydrates) 95 கிராம்
  • மதிப்புக் கூட்டினால் ஏக்கருக்கு லட்ச ரூபாய் !
  •  பொதுவாக 50 டன் கரும்பிலிருந்து 5 முதல் 6 டன் நாட்டுச் சர்க்கரையை உற்பத்தி பண்ணலாம். 60 கிலோ மூட்டை ஆயிரத்து ஐநூறு ரூபாய்ல இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை விலை போகுது. இந்தக் கணக்கை வைத்து பார்த்தால்… ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் கிடைக்கும்.
  •  கரும்பு வெட்டிலிருந்து விற்பனை வரை எல்லா செலவும் சேர்த்து, 50 ஆயிரம் ரூபாய் போனாலும்… ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் நிச்சயம் லாபமா கிடைக்கும். இந்த நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செழிப்பாக இருக்கணும் என்றால், அரசாங்கம் அஸ்கா சர்க்கரை உற்பத்தி பண்றதுல செலுத்துற கவனத்தில், கொஞ்சமாவது நாட்டுச் சர்க்கரை பக்கமும் திரும்பினால்தான் கவுந்தப்பாடி சர்க்கரை… தலைமுறைகள் தாண்டியும் இனிக்கும்”

வெள்ளைச் சர்க்கரை (சீனி ) மெல்லக்கொல்லும் வெள்ளை நஞ்சு! :

  •  நாம் தினமும் உண்ணும் சர்க்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம் சர்க்கரையைப் பயன்படுத்துகிறோம்.
  • இந்த வெள்ளைச் சர்க்கரை தயாராகும் விதத்தை நாம் தெரிந்து கொண்டால் அது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த வெள்ளைச் சர்க்கரை தயாரிக்க பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை.
  • சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்களைத் தொடும்’ என்கிறது பன்னாட்டுச் சர்க்கரை நோய்க் கழகம். பிறக்கும் போதே சர்க்கரை வியாதியுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கையும் இளம் வயதில் மாரடைப்பால் இறந்து போவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருதற்கு மிக முக்கியமான காரணம் வெள்ளைச்சர்க்கரை என பல்வேறு மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்திய நிலையில் வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

வெள்ளை சர்க்கரையில் உள்ள இரசாயன பொருட்கள்:

  •  கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் நம் வீட்டு கழிப்பறைக்கு பயன்படுத்தும் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
  •  பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
  • 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல வைட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
  • அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
  •  சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
  • மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
  •  இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
  •  தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரையை நாம் உணவில் சேர்த்தால், 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும்.
  •  உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமாக ‘இன்சுலின்’ வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் ‘இன்சுலினுக்கும்’ நோய் எதிர்ப்புசக்தியை தடுக்கும் ஹார்மோன்களான, புரோஸ்டேகிளேன்டான்-க்கும் அதிக தொடர்பு இருக்கிறது.இது புற்றுநோய் கட்டியை உருவாக்குகிறது.
  •  ‘கேன்டிடா எல்பிகன்ஸ்’ என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க்கரை, இன்னும் அதிகளவு துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக ‘சுக்ரோஸ்’ உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு இயற்கையாகவே கால்சியம் சத்துக்குறைபாடு ஏற்படும். அந்த சமயத்தில் வெள்ளைச்சக்கரையை தவிர்ப்பது நல்லது.
  • வளர்ச்சி என்ற பெயரில் தொழில் நுட்பம் கொண்டுவந்ததுதான் வெள்ளைச் சர்க்கரை. உண்மையில் மதுவையும் புகையையும் போல தடை செய்யப்பட வேண்டிய பொருள் இந்த வெள்ளைச் சர்க்கரை. ஆனால் இன்று சர்க்கரை, உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்தபடியாக உள்ளது. உலகின் சர்க்கரை நோயில் நம்மை முதலிடத்தில் தள்ளியமைக்கும், பெருவாரியான பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸ் இடுப்புவலிக்கும், இன்னும் பல கான்சர் நோயின் வளர்ச்சிக்கும் வெள்ளை சர்க்கரை ஆற்றிய பங்கு அளப்பறியது.
  •  நாம் இனிப்பு சாப்பிடாதவர் அல்ல. நிறையவே சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னரான விஜய ராகவ நாயக்கர் எழுதிய இரகுனாதப்யுதய நூலில் உள்ள இனிப்பு பட்டியலைப் பார்த்தால் ” அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு(பாசந்தி), பன்னீர்பாயாசம், சீரகப்பாயாசம், குளிர் பாயாசம், திரட்டுப்பால், சீகரணி, தேங்காய்பால்” என லாலாக்கடையில் கிடைக்காத பெரிய பட்டியல் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ளது தெரிகிறது.
  •  இனிப்புக்கள் அத்தனையும் அப்போது பனைவெல்லத்திலும், தேனிலும் தான் செய்யப்பட்டிருந்தன. வெள்ளை சர்க்கரையில்ல. எந்த வகையிலும் இந்த இயற்கையின் இனிப்புக்கு மாற்றாக வர இயலாத வெள்ளை சர்க்கரை தொழில் நுட்ப உதவியால் ஒட்டு மொத்தமாய் திணிக்கப்பட்டுவிட்டது. ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

Recommended Posts

வாழை இலையின் மகத்துவம்

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்டநாள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு ...

Read Article
குடிநீரை பாதுகாக்கும் செம்பு பாத்திரங்கள்

தண்ணீரை செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை...

Read Article
கர்ப்பிணி பெண்களுக்கு பயன்படும் மூலிகைகள்

அத்தி இதன் பழம் இரும்பு சத்தை அதிகரித்து கருவை நன்றாய் வளர்க்கும். மாதுளம் : இதன்...

Read Article
உலர் திராட்சையின் பயன்கள்…!

தினசரி உணவுக்குப் பின்னர் காலை, மாலையில் 25 உலர் திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள்...

Read Article
பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட ...

தங்கள் அம்மா, மனைவி, பெண் குழந்தைகள்.... அவசியம் சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை. சுண்டக்காய். சிவப்பு கொண்டைக்கடலை...

Read Article
இந்து உப்பு என்றால் என்ன ...

மனிதனுக்கு உப்பு என்ற ஒன்றை தெரிந்திருக்காவிட்டால் அவன் நாடோடி வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக விட்டிருக்க மாட்டான்...

Read Article
புங்கன் மரம் – நம் ...

காற்றில் உள்ள வெப்பத்தையும், மாசுவையும் குறைக்கும். பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும்....

Read Article
பழமொழி வடிவில் உணவு பழக்கமா ...

சீரகம் இல்லா உணவு சிறக்காது. தன் காயம் காக்க வெங்காயம் போதும். வாழை வாழ வைக்கும்....

Read Article
வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம் ...

இரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீருற்றி வைக்கலாம். நீருற்றிய சோறு அதாவது, பழைய...

Read Article
பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ...

பயிர்களின் வளர்ச்சிக்கு  16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் . பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள்...

Read Article
5 ந்தே நிமிடத்தில் சாகக் ...

3 நிமிடம் உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள். ஒரு கூட்டம், இந்தியர்கள் முட்டாள்கள்,...

Read Article
திரிபலாவை பருவ மழைக்காலங்களில் சாப்பிடுவதால் ...

வாழ்க்கை முறை மாற்றங்களால் வயது வந்தோருக்கும் முதியோருக்கும் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் பொதுவானதாக இருக்கிறது. நாகரிக...

Read Article
மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட ...

உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும்...

Read Article
சம்மணமிட்டு சாப்பிடும்போது உடலில் ஏற்படும் ...

அமர்ந்து உணவருந்தும் முறையில் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருகின்றன. முன்பெல்லாம் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடும்...

Read Article
மாற்றம் நிச்சயம்….!! விழித்து கொள்ளுங்கள்.!

வேண்டிய அளவுக் கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.! கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.!...

Read Article
ஜாதிக்காய்

ஜாதிக்காயில் நிறைய ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. இது வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நியாசின், ஃபோலிக்...

Read Article
கிராம்பு

கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும். இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து...

Read Article
கடுக்காய்

கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும்,...

Read Article
அதிமதுரம்

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ளப் பசைப் பொருளும்,...

Read Article
திப்பிலி

திப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர்....

Read Article
மிளகு

மூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். தொண்டை வலிக்குத்...

Read Article
சுக்கு

கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை...

Read Article
திரிகடுகம்

திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல...

Read Article
மக்கள் ஆரோக்கியம்

நமது மரபுவழி விவசாயம் அழிக்கப்பட்டு, நவீன விவசாயம் என்ற பெயரில் ரசாயன உரம், பூச்சிமருந்து ஆகியவற்றால்...

Read Article
15,000 ஆண்டு விவசாய வரலாறு ...

எங்கு பார்த்தாலும் இயற்கை அங்காடிகள். கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. "இங்கே இயற்கை...

Read Article
உடன்குடி கருப்பட்டி

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்....

Read Article
விவசாய குறிப்புகள்

 எலுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போடுவதன் மூலம் செடிகள் நன்றாக செழித்து வளரும், அதேபோல் காயும்...

Read Article
உடல்நலக் குறிப்பு

என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் “நெல்லிக்கனி”.  இதயத்தை வலுப்படுத்த "செம்பருத்திப் பூ".  மூட்டு...

Read Article
மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே ...

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது வேலை பளுவின்...

Read Article
உண்மையை உணர்வோம்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!! அந்த...

Read Article
உடனடியாக மாற வேண்டியவை

நமது உணவு நுகர்வு நடைமுறையில் - உடல் நலத்தின் பொருட்டாக - உடனடியாக மாற்ற வேண்டிய...

Read Article
மதுவை விட பாதிப்பு, பிராய்லர் ...

 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ்,...

Read Article
எந்த நேரத்தில் செல்போனை உபயோகிக்கக் ...

ஏன் உணவு சாப்பிடும்போது தொலைக்காட்சி மற்றும் வேறு கவன ஈர்ப்புக்கள் (மொபைல், நியூஸ் பேப்பர், உரையாடுதல்)...

Read Article
குதிரைவாலி சாகுபடி அதிகரிப்பு

 வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக நெல்லுக்கு மாற்றாக குதிரைவாலி சாகுபடி தென் தமிழகத்தில் வேகமாக...

Read Article
வேர்கடலை கொழுப்பு அல்ல …! ...

நிலக்கடலைக் குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்டுள்ளது....

Read Article
புதினாவின் மருத்துவப் பயன்கள்

 புதினா வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான...

Read Article
இஞ்சியின் மருத்துவப் பயன்கள்

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.  இஞ்சித் துவையல்,...

Read Article
இயற்கை உரமாக தக்கை பூண்டு ...

 தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம்...

Read Article
சுண்டை காய்

சுண்டை காய் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக்...

Read Article
டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட ...

சிறு வெங்காயம் :  சின்ன வெங்காயத்துடன் சாதாரண அச்சுவெல்லம் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் டெங்குவைக்...

Read Article
நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு ...

இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகவோர் தேடி வாங்க துவங்கியுள்ளனர்....

Read Article
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது (GLYPHOSATE ...

 இந்தியாவில் பெரும் தொல்லைகளை உருவாக்கி வந்த இரசாயனத்தை இந்திய அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ளது.  மரபணு மாற்றம்(Genetically...

Read Article
மழை நீரில் குளிக்கும் ஒருவருக்கு ...

 மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு, ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே...

Read Article
சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். சீரகத்தையும், உப்பையும்...

Read Article
வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய ...

வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 15 மூலிகைகளும்! அதன் அற்புதமான மருத்துவ பயன்களும். அந்தக் காலங்களில்...

Read Article
இளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்கள்

இளநீரில் இவ்வளவு விஷயங்களா?   இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம்,...

Read Article

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
January 2018
M T W T F S S
« Dec   Feb »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031