கீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் காணப்படுகின்றது. கீழா நெல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. கீழா நெல்லி இலைகள், சிறியவை. கூட்டிலை வடிவமானவை. இரு வரிசையாக அமைந்தவை. கீழா நெல்லி இலைகளைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய நடு நரம்பின் கீழ்ப் பாகம் முழுவதும் கீழ் நோக்கிய பசுமையான சிறு பூக்களும் காய்களும் தொகுப்பாகக் காணப்படும். இதனாலேயே கீழாநெல்லி என்றப் பெயர் பெற்றது. ஈரமான...
Learn moreசங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது....
Learn moreபொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்; கோழை அகற்றும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும். பொடுதலை வீக்கத்தைக் கரைக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; சீதக் கழிச்சல், இருமல், வெள்ளை படுதல் போன்றவற்றையும் குணமாக்கும். பொடுதலை சிறுசெடி வகையைச் சார்ந்தது. தரையோடு கிடைமட்டமாக படர்ந்து வளரும். பற்கள் கொண்ட சொர சொரப்பான கரண்டி வடிவ இலைகளையும், கதிரான பூங்கொத்துகளையும் உடையது. பொடுதலை ஆண்டு முழுவதும் பூக்கள், காய்களுடன் காணப்படும்....
Learn moreமுழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்; சிறுநீர் பெருக்கும்; காமம் பெருக்கும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; ஆண்மையைப் பெருக்கும்; இரத்தைப்போக்கை கட்டுப்படுத்தும். நெருஞ்சில் கனிகளில், நிலைத்த எண்ணெய், பிசின்கள் மற்றும் நைட்ரேட் உப்புகள் காணப்படுகின்றன. நெருஞ்சில் விதைகள், சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு ஆகியவற்றைக் குணமாக்கும். நெருஞ்சில் தரையோடு படரும் செடி வகையைச் சார்ந்தது. நுண்ணிய மயிரிழைகளால் அடர்த்தியாக சூழப் பட்டிருக்கும். சுரீல் எனக் குத்தும்...
Learn moreநந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல மருந்துகளில் இது சேர்கின்றது. கண்காசம், படலம், மண்டைக்குத்தல் ஆகியவை கட்டுப்படும். நந்தியாவட்டை பால், வேர், ஆகியவை காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. நந்தியாவட்டை பால் வெட்டுக் காயங்களைக் குணமாக்கும். நந்தியாவட்டை வேர், புழுக்களைக் கொல்லும். நந்தியாவட்டை புதர்ச்செடியாகவோ அல்லது குறுஞ்செடியாகவோ காணப்படும். நந்தியாவட்டை இலைகள், எதிர் அடுக்கில் அமைந்தவை. கரும்பச்சை நிறமானவை. பளபளப்பானவை. ஈட்டி வடிவமானவை. நந்தியாவட்டை மலர்கள், நுனியில்...
Learn moreநாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும். நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கச் செய்யும்; ஆரோக்கியம் தரும்; முறைக் காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும். நாயுருவி வேர் கருப்பையைச் சுருக்கும்; வாந்தியை உண்டாக்கும்; கருவைக் கலைக்கும்; முக வசீகரத்தை அதிகமாக்கும். நாயுருவி...
Learn moreஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக் கசப்புச் சுவை காரணமாக கால்நடைகள் கூட ஆடாதோடை இலைகளைச் சாப்பிடுவதில்லை. ஆடாதோடைக்குப் பாடாத தொண்டையும் பாடும் என்கிற பழமொழி உண்டு. ஆடாதோடை இலைகளில் ஒரு முக்கியமான எண்ணெயும், வாசிசீன் என்கிற ஆல்கலாய்டும் உள்ளன. ஆடாதோடை தாவரத்தின் முக்கியமான மருத்துவப் பண்பு சளியை வெளிக்கொண்டு வருவதாகும். இலையைக் குடிநீர் செய்து சாப்பிட்டுவர தொண்டையை எப்போதும் வலுவாக வைத்திருக்கும். சளியைப் போக்கும் தன்மையுடன்...
Learn moreகுப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன. குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் / கொழுப்பைக் குறைக்கும் பதிவுரிமை செய்யப்பட்ட மருந்து குப்பைமேனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. குப்பைமேனி தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகவும் சாதாரணமாக பரவிக் காணப்படுகின்ற ஒரு களைச் செடி. இரண்டரை...
Learn moreகீழாநெல்லி இலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும். நவச்சாரத்தில் (அம்மோனியா உப்பு) சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி வலி குறையும். தேள் கொட்டினால் புளியை கரைத்து சிறிது குடித்து விட்டு தேள் கொட்டிய இடத்திலும் புளியை தடவி வந்தால் விஷம் குறையும். தூள் உப்பு இரண்டு தேக்கரண்டியுடன் மயில் துத்தத்தையும் தூள் செய்து கலந்து தேள்...
Learn moreகல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும். வாழைத்தண்டு சாறை எடுத்து தீப்புண் பட்ட இடத்தில் அடிக்கடி ஊற்றி வர தீப்புண் ஆறும். 30 மில்லி தேங்காய் எண்ணெயுடன், 50 மில்லி தெளிந்த சுண்ணாம்பு நீரைக் கலந்து தீப்புண்ணின் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.. முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து இலேசாக அடித்து கலக்கி தீப்புண்கள் மீது தடவி வந்தால் தீப்புண்கள் மற்றும் எரிச்சல் குறையும். உருளைகிழங்கு சாற்றை பூசுவதால் தீக்காயம் குணமாகும்....
Learn more
Login with