Posted by admin
- Dec 19, 2017
- 2029
- 0
நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது. இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும். சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு சிறுவர்களின் விளையாட்டு தளமாக இருக்கிறது. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை ((Eugenia Jambos) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும். நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும்.
நீரிழிவு நோய் :
- நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும்.
- ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.
ரத்தப்போக்கு :
- பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.
சிறுநீர் எரிச்சல் :
- சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.
பேதி :
- நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.
தொண்டைப் புண், தொண்டை அழற்சி :
- 10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும். இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
- கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.
பிற பயன்கள் :
- நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு. தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.
- நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு. நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.
- இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது. நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. இது ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரைக் கிடைக்கும்.
- இதைச் சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். இதன் துவர்ப்பு ருசியும், இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் நாவில் படிந்துவிடும் நீல நிறமும் காரணங்களாக இருக்கலாம்.
- வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது. சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப்போக்குக் குறையும்.
- நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.
மூல நோய்க்கு :
- மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.
- பழம் அதிகம் விளையும் காலத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில் சாப்பிட வேண்டும்.
- இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.
நாவல் பட்டை :
- 100 ஆண்டுகள் பழமையான நாவல் மரப் பட்டை காயகற்ப மருந்து செய்ய பயன்படுத்தப்படுகிறது.
- நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்பு நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.
நாவல் இலை :
- நாவல் கொழுந்து இலைச்சாறு – 1 ஸ்பூன், தோல் நீக்கிய ஏலக்காய் அரிசி – 4, இலவங்கப்பட்டை தூள் – 1/2 ஸ்பூன்,
- இவற்றை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும்.
நாவல் கொட்டை :
- நாவல் பழத்தின் கொட்டைகளை எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.
- சர்க்கரை நோயின் பாதிப்பிற்கு ஆளானவர்களும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் இதனைச் சாப்பிடலாம்.
- நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்கும் தன்மை கொண்டது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நாற்பது வயதை அடைந்தவர்கள் அனைவரும் நாவல் கொட்டைச் சூரணம் சாப்பிடுவது நல்லது.
- நாவல் கொட்டையை லேசாக வறுத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து டீ, காஃபி க்கு பதிலாக அருந்தலாம். இன்றும் மலைவாழ் மக்கள் நாவல் கொட்டையை டீ, காஃபிக்கு பதிலாக அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வேரின் குணம் :
- மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் தரும்.
- நாவல் பழம் பசி எடுக்க வைக்கும். இரைப்பை, மற்றும் கல்லீரலுக்கு பலம் தரக்கூடியது. வயிற்றுப்போக்குகளை நிறுத்துவதற்கும் பயன் படுகிறது. இதன் விதைகள் சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்த வல்லவை. இலைகளின் பொடி பற்களுக்குப் பயன் தரக்கூடியது. நாவல் இலையின் தூளை மூன்றிலிருந்து 5 கிராம் வரையிலான அளவில் பயன்படுத்த வேண்டும்.
- நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
- சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
- நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.
- தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
- நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
அளவோடு சாப்பிட வேண்டும் :
- நாவல் பழத்தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.
- பழத்தையோ, பழச்சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடவேக் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் 3 மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாது.
Tags:
Recommended Posts
- Mar 14, 2018
- 6357 read
பாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி...
Read Article- Jan 6, 2018
- 3074 read
நம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள்...
Read Article- Jan 6, 2018
- 2461 read
இரண்டு முறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ...
Read Article- Jan 6, 2018
- 2124 read
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்.9-ம் வகுப்பு...
Read Article- Jan 3, 2018
- 3900 read
கருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம்...
Read Article- Jan 3, 2018
- 6367 read
மாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA: பெயர் காரணம் : பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா...
Read Article- Jan 3, 2018
- 3267 read
தங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு...
Read Article- Jan 3, 2018
- 2812 read
அறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும்...
Read Article- Jan 3, 2018
- 1936 read
பெயர் காரணம் : நெற்பயிர்களின் வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப்...
Read Article- Jan 3, 2018
- 3172 read
பிசினி அரிசி/PISINI RICE தனித்துவம்(Speciality): பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக்...
Read Article- Jan 3, 2018
- 3087 read
தனித்துவம்(Speciality): மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச்...
Read Article- Jan 3, 2018
- 4798 read
காட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே...
Read Article- Jan 3, 2018
- 4475 read
தனித்துவம்(Speciality): கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை...
Read Article- Jan 3, 2018
- 9088 read
கருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE தனித்துவம்(Speciality): கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில்...
Read Article- Jan 3, 2018
- 4215 read
தூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI தனித்துவம் (Speciality): தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த...
Read Article- Jan 3, 2018
- 2532 read
காட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI RICE தனித்துவம் (Speciality): காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட(Inter...
Read Article- Jan 3, 2018
- 2431 read
குருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE தனித்துவம் (Speciality): குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும்....
Read Article- Jan 3, 2018
- 3087 read
காலா நமக் அரிசி/KAALA NAMAK RICE பெயர் காரணம் : ‘காலா நமக்’ பாரம்பரிய நெல் வகைகளில்...
Read Article- Jan 3, 2018
- 2588 read
தேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO SAMBA RICE தனித்துவம் (Speciality): தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே...
Read Article- Jan 3, 2018
- 8942 read
சீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்...
Read Article- Jan 3, 2018
- 7065 read
குள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE தனித்துவம் (Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார...
Read Article- Jan 3, 2018
- 3341 read
வெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE பெயர் காரணம் : சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட...
Read Article- Jan 3, 2018
- 6710 read
தனித்துவம் (Speciality): பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத்(Flood) தாங்கி வளரக் கூடியது. விதைப்புச்...
Read Article- Dec 21, 2017
- 2564 read
மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது....
Read Article- Dec 21, 2017
- 3796 read
மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மனிதனை வாழ்விக்க வந்த வரப் பிரசாதமாகும். மனிதன் உட்பட்ட அனைத்து...
Read Article- Dec 21, 2017
- 3722 read
கடுக்காய் (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது...
Read Article- Dec 21, 2017
- 2571 read
அகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக...
Read Article- Dec 21, 2017
- 2325 read
தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு...
Read Article- Dec 21, 2017
- 3268 read
தாவரங்கள் தங்களிடமிருந்து, வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன....
Read Article- Dec 21, 2017
- 6109 read
நான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்தப் புத்தகங்களில் அரபுக் கதைகள் எனப்படும் 1001 இரவுகள்...
Read Article- Dec 21, 2017
- 2263 read
கொய்யா (Psidium guajava, common guava) என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய...
Read Article- Dec 21, 2017
- 2369 read
வாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஓர்வித்திலைச்...
Read Article- Dec 21, 2017
- 2476 read
தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில்...
Read Article- Dec 21, 2017
- 1549 read
மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு...
Read Article- Dec 19, 2017
- 3077 read
நெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில்...
Read Article- Dec 19, 2017
- 1902 read
இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா /...
Read Article- Dec 19, 2017
- 2180 read
வில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா...
Read Article- Dec 19, 2017
- 2277 read
புளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை...
Read Article- Dec 19, 2017
- 2675 read
இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும்....
Read Article- Dec 19, 2017
- 2960 read
வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும்...
Read Article- Dec 19, 2017
- 2974 read
பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில்...
Read Article- Dec 19, 2017
- 1814 read
ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால்...
Read Article- Dec 19, 2017
- 2637 read
அரச என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய...
Read Article- Dec 11, 2017
- 1987 read
அனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை - இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள்...
Read Article- Dec 11, 2017
- 1962 read
பனை,புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில்...
Read Article- Dec 8, 2017
- 2561 read
செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண்...
Read Article- Dec 8, 2017
- 3721 read
தொழில்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய...
Read Article- Dec 8, 2017
- 2065 read
பாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே...
Read Article- Dec 8, 2017
- 2721 read
“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப்...
Read Article- Dec 8, 2017
- 1830 read
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில்...
Read Article- Dec 8, 2017
- 2490 read
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி...
Read Article- Dec 8, 2017
- 2445 read
மீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருட்கள்: 10 கிலோ மீன் கழிவு. எலும்புகள், முட்கள், துடுப்புகள்...
Read Article- Dec 8, 2017
- 2324 read
தென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல்...
Read Article- Dec 8, 2017
- 2462 read
பனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து...
Read Article- Dec 8, 2017
- 2927 read
குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல்...
Read Article- Dec 8, 2017
- 2469 read
சாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம்...
Read Article- Dec 8, 2017
- 1636 read
சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில்...
Read Article- Dec 8, 2017
- 2444 read
கம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள்,...
Read Article- Dec 8, 2017
- 1925 read
கேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி...
Read Article- Dec 8, 2017
- 4940 read
உணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். சிறு தானிய வகைகள்...
Read Article- Dec 7, 2017
- 4477 read
அறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற...
Read Article