அரசமரம்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

அரசமரம்

அரச என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது. இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது 10 தொடக்கம் 17 சதம மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 சதம மீட்டர்கள் வரை அகலம் கொண்டதாகவும் இருக்கும்.இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது. அரசமரத்தின் இலைக் காற்று குளிர்ச்சியை உண்டாக்கி வெப்பத்தைப் போக்கி கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. ஆண் பெண்மையைக் காப்பாற்றும். வேர்பட்டை, மரப்பட்டை கிருமிகளை அழித்து புண்ணாற்றும், பழவிதை குடல் புண்ணாற்றும், மலச்சிக்கலைப் போக்கும், தாது பெருக்கி விந்தினைக் கட்டும். பழம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும், வேர் அல்சரைக் குணப்படுத்தும், தோல்வியாதிகளைக் குணப்படுத்தும், இருதயத்தைக் குணமாக்கும்.

மருத்துவப் பயன்கள் :

  •  அரச மரத்துக் கொழுந்து இலையைக் கைப்பிடி எடுத்து அரைத்து, நெல்லிக்காயளவு எருமைத் தயிருடன் சேர்த்து அதிகாலையில் சாப்பிட்டு வர, தொண்டை வறட்சி, தாகம் நீங்கும். குரல் வளத்தைத் தரும். சீதபேதியைக் கட்டுப்படுத்தும்.
  • அரச மர வேரின் பொடி தொண்டைப் புண்ணை ஆற்றும்.
  • கொழுந்து அரைத்துச் சாப்பிட நீர்த்துப் போன விந்து கெட்டியாகும், தாது ஊறும், உடல் வெப்பம் தணியும். வாத, பித்த, சிலேத்தும நோய்களைப் போக்கும்.
  •  அரச தளிரை அரைத்துப் பூசினால் கால்வெடிப்பு குணமாகும். இதன் பாலைத் தடவினாலும் குணமாகும்.
  •  அரச மரப்பட்டையை உலர்த்தி எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர சொறி, சிரங்கு குணமாகும், பிற புண் ஆறும். இப்பொடியை சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைத்தால் தீங்கு செய்யும் நுண்ணுயிர்க் கிருமிகள் வீட்டில் தங்காது.
  •  வேர் பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி பால் சர்க்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச் சூடு, தினவு, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.
  •  அரச பட்டைத் தூள் 2 சிட்டிகை வெந்தீரில் கொதிக்க வைத்து ஆற விட்டு வடித்துக் கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.
  •  அரச மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுத்து சுத்தப்படுத்தி நன்கு காயவைத்துப் பொடியாகச் செய்து சூரணமாக வைத்துக் கொள்ள வேண்டும். 5-10 கிராம். இப்பொடியை நாளும் காலை மாலை பாலில் கலந்து சர்க்கரையும் சேர்த்து காப்பி போல 48-96 நாள் சாப்பிட வேண்டும். ஆண் விந்து கட்டும், ஊறும். ஆண்மை பெருகும். ஆண் மலடு நீங்கும்.
  •  அரசங் கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியவை தீரும். உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாள்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்.
  •  அரச இலைக் கொழுந்து ஒரு பிடி எடுத்து மண் சட்டியில் போட்டு அரை லிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காசாயமிட்டுச் சாப்பிடலாம்.
  •  இலைக் கொழுந்தை அரைத்து நெல்லியளவு பாலில் கலந்து சாப்பிடலாம். 48 நாள் சாப்பிட பெண்மலடு நீங்கி கருத்தரிக்கும். புளி உணவைக் குறைக்க வேண்டும்.
  •  அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது.
  •  இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் பாரத பூமிதான். நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.
  • நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல்பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.
  • அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும். முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும்.
  •  அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.
  •  அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
  •  வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி யாகக் காய்ச்சிப் பால் சர்க்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச் சூடு, சொறி, தினவு, நீர்எரிச்சல், சிரங்கு ஆகியவை தீரும். அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.
  •  பட்டைத் தூள் 2 சிட்டிகை நீரில் ஊற வைத்து வடிகட்டிக் கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும். வெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.
  •  அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும். அரச மரத்தின் பாலை எடுத்து பாத வெடிப்புகள் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் பித்த வெடிப்புகள் விரைவில் மறையும்.
  •  அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால், மன அழுத்தம், மன எரிச்சல், அதீத கோபம், தீரா சிந்தனை போன்றவை தீரும். அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

Recommended Posts

பாரம்பரிய அரிசி/TRADITIONAL RICE

பாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி...

Read Article
பாரம்பரிய நெல் ரகங்கள்

நம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள்...

Read Article
நெல்லுக்கு இயற்கை உரங்கள்

இரண்டு முறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ...

Read Article
இரா.ஜெயராமன் வாழ்க்கை வரலாறு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்.9-ம் வகுப்பு...

Read Article
கருடன் சம்பா/GARUDAN SAMBA

கருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம்...

Read Article
மாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA

மாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA: பெயர் காரணம் : பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா...

Read Article
தங்கச் சம்பா/THANGA SAMBA

தங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு...

Read Article
குடவாழை அரிசி/KUDAVAAZHAI ARISI

அறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும்...

Read Article
வரப்புக் குடைஞ்சான்/VARAPPU KUDAINCHAN

பெயர் காரணம் :  நெற்பயிர்களின்  வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப்...

Read Article
பிசினி அரிசி/PISINI RICE

பிசினி அரிசி/PISINI RICE தனித்துவம்(Speciality): பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக்...

Read Article
மைசூர் மல்லி அரிசி/MYSORE MALLI ...

தனித்துவம்(Speciality): மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது,  மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச்...

Read Article
காட்டுயானம்/KAATU YANAM

காட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை  மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே...

Read Article
கிச்சலி சம்பா அரிசி/KICHALI SAMBA ...

தனித்துவம்(Speciality): கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை...

Read Article
கருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE

கருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE தனித்துவம்(Speciality): கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில்...

Read Article
தூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI

தூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI தனித்துவம் (Speciality): தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த...

Read Article
காட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI ...

காட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI RICE தனித்துவம் (Speciality): காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட(Inter...

Read Article
குருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE

குருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE தனித்துவம் (Speciality): குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும்....

Read Article
காலா நமக் அரிசி/KAALA NAMAK ...

காலா நமக் அரிசி/KAALA NAMAK RICE பெயர் காரணம் :  ‘காலா நமக்’  பாரம்பரிய நெல் வகைகளில்...

Read Article
தேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO ...

தேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO SAMBA RICE தனித்துவம் (Speciality): தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே...

Read Article
சீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA ...

சீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் :  சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்...

Read Article
குள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE

குள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE  தனித்துவம் (Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார...

Read Article
வெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE

வெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE பெயர் காரணம் : சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட...

Read Article
பூங்கார் அரிசி/POONGAR ARISI

தனித்துவம் (Speciality): பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத்(Flood) தாங்கி வளரக் கூடியது. விதைப்புச்...

Read Article
மருதாணி மரம்

மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது....

Read Article
பூவரசு மரம்

மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மனிதனை வாழ்விக்க வந்த வரப் பிரசாதமாகும். மனிதன் உட்பட்ட அனைத்து...

Read Article
கடுக்காய் மரம்

கடுக்காய் (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது...

Read Article
அகத்தி மரம்

அகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக...

Read Article
தென்னை மரம்

தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு...

Read Article
ரப்பர் மரம்

தாவரங்கள் தங்களிடமிருந்து, வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன....

Read Article
அத்தி மரம்

நான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்தப் புத்தகங்களில் அரபுக் கதைகள் எனப்படும் 1001 இரவுகள்...

Read Article
கொய்யா மரம்

கொய்யா (Psidium guajava, common guava) என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய...

Read Article
வாழை மரம்

வாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஓர்வித்திலைச்...

Read Article
சந்தன மரம்

தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில்...

Read Article
மா மரம்

மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு...

Read Article
நெல்லி மரம்

நெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில்...

Read Article
இலந்தை மரம்

இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா /...

Read Article
வில்வம் மரம்

வில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா...

Read Article
புளிய மரம்

புளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை...

Read Article
இலுப்பை மரம்

இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும்....

Read Article
வேம்பு மரம்

வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும்...

Read Article
பலா மரம்

பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில்...

Read Article
நாவல் மரம்

நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae)...

Read Article
ஆலமரம்

ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால்...

Read Article
பப்பாளி மரம்

அனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை - இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள்...

Read Article
பனைமரம்

பனை,புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில்...

Read Article
மண் புழு உரம்

செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண்...

Read Article
பஞ்சகவ்யம்/PANJAKAVIYAM

தொழில்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய...

Read Article
பாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள்

பாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே...

Read Article
பூச்சிக் விரட்டி மருந்து பயன்படுத்துவதால் ...

“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப்...

Read Article
ஆட்டு எரு

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில்...

Read Article
சருகு உரம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி...

Read Article
மீன் அமிலம்

மீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருட்கள்:  10 கிலோ மீன் கழிவு. எலும்புகள், முட்கள், துடுப்புகள்...

Read Article
நார்க்கழிவு உரம்

தென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல்...

Read Article
பனிவரகு/PANIVARAGU

பனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில்  கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து...

Read Article
குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE

குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல்...

Read Article
சாமை அரிசி/LITTLE MILLET

சாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம்...

Read Article
வரகு

 சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில்...

Read Article
கம்பு/PEARL MILLET

கம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள்,...

Read Article
கேழ்வரகு/ராகி/FINGER MILLET

கேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும்,  தமிழ்நாடும் ராகி...

Read Article
பாரம்பரிய சிறுதானியம்/TRADITIONAL MILLETS

உணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். சிறு தானிய வகைகள்...

Read Article
பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள்

அறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற...

Read Article

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
December 2017
M T W T F S S
« Jan   Jan »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Tags Cloud
азартного бренда букмекерской конторы делать ставки официального сайта இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES