Login

Register

Login

Register

பூச்சி மருந்துகளால் பேராபத்து

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

பூச்சி மருந்துகளால் பேராபத்து

பயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை அழிக்கும் ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதால், மக்கள் கொடிய நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்,  என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார். தமிழக விவசாயிகள் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கின்றனர். இதுகுறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதாவது. தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் கத்தரி, தக்காளி, வெண்டை என, அனைத்து தோட்டக் கலைப் பயிர்கள் மற்றும் நெல் பயிர்களைப் பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்க என்டோசல்பான், மானோகுரோட்டம்பாஸ், எக்காளாக்ஸ் போன்ற ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

  •  கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான, 12 ஆயிரத்து 500 ஏக்கர் முந்திரி தோட்டம் இருந்தது. இதில், பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த, ஹெலிகாப்டர் மூலம் என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்டது.
  •  அந்த மருந்து காற்றின் மூலம், சுற்றுப் பகுதியில் உள்ள 25 கிராமங்களுக்குப் பரவியது. பூச்சிக்கொல்லி மருந்தைச் சுவாசித்த ஏராளமானோர் இறந்தனர். பொதுமக்கள் பலர் தோல் நோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  •  கிராமங்களில் குறைப் பிரசவ குழந்தைகள் அதிகம் பிறக்கிறது. இந்த பாதிப்புப் பல தலைமுறைக்கும் தொடரும். அதனால், கேரளா அரசு என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு, நாடு முழுவதும் தடை விதிக்கப் போராடுகிறது.
  •  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இயற்கை ஆர்வலர்களும், பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடைவிதிக்கக் கோரி, சுற்றுச்சூழல் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, 72 நாடுகளில் தடை விதிக்கப்பட்ட, 17 வகை உள்ளிட்ட, 140 வகை பூச்சிக்கொல்லி மருந்துகள், இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன.
  •  மற்ற நாடுகள் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை விதித்துள்ள நிலையில், மக்கள் குறித்துக் கவலைப்படாமல், தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, இந்தியாவில் ஒரு குழுவினர் வெளிநாட்டுப் பூச்சி மருந்து கம்பெனிகளுக்குச் சாதகமாக செயல்படுகின்றனர்.
  •  பூச்சிக்கொல்லி மருந்துகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, தேனீக்கள், சிறுப் பூச்சிகள், பறவைகள் என, அனைத்துமே அழிகின்றன. வேப்பிலை, நொச்சி, சோற்று கற்றாலை, எருக்கு, ஊமத்தை போன்றவை இயற்கையான பூச்சி விரட்டி மருந்துகளாகும்.
  • அதைக் காய்கறித் தோட்டத்தில் பயன்படுத்துவதால், பூச்சிகளை விரட்டி அடிக்கப்படும். அவைகள் அழிந்துப் போகாது. சுற்றுச்சூழலும் பாதிக்காது. மனிதர்களையும் கொடிய நோய் தாக்காது. தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளைப் பயன்படுத்துவது தொடருமானால், வருங்காலத்தில் கொடிய நோய்களால் பாதிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
  •  இவ்வாறு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.

Recommended Posts

யார் இந்த நம்மாழ்வார்?

தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு...

Read Article
விவசாய புரட்சி பற்றிய தகவல்கள்

இன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம்....

Read Article
நம்மாழ்வார் சொன்ன விஷயங்கள்!

நோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக்...

Read Article
இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்

அதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும்...

Read Article
விவசாயிகளுக்கு எதிராக அரசு

“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை...

Read Article
இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள்

ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர்...

Read Article
இந்திய மண்ணுக்கேற்ற விவசாயம்

ஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு...

Read Article
இயற்கை விவசாயமே…

இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத்...

Read Article
நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்?

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை...

Read Article

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
December 2017
M T W T F S S
    Jan »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031