இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்

அதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு திரும்புமாறு விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறைகூவல் விடுத்துள்ளார். புதுக்கோட்டை அடுத்த வாகைப்பட்டியில் ரோஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாப்பது குறித்த விவசாயிகளுக்கானக் கருத்தரங்கு நடந்தது. இதை துவக்கிவைத்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது. உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வெளிநாடுகளிடம் ஆலோசனைகள் பெற்று நவீன ரக தானியங்களை குறிப்பாக நெல் ரகங்களை அறிமுகம் செய்தனர்.

 • இவற்றைச் சாகுபடிச் செய்வதற்காகப் பல வகையான இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 • இதன் விளைவாக நம் முன்னோர்கள் சாகுபடிச் செய்த பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் படிப்படியாக மறையத் துவங்கியது. ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் பாலைவனங்களாக மாறிவருகிறது.
 •  கால்நடைகளுக்குத் தீவன(வைக்கோல்) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 •  இவை எல்லாவற்றுக்கும் மேலாக நவீன ரக நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடும் மனித இனம் வித விதமான நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பரிதவித்து வருவதைக் காண முடிகிறது.
 •  இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் பின்பற்றியப் பயிர் சாகுபடி முறைகளை நாமும் பின்பற்றவேண்டியது அவசியமாகிறது.
 •  இதற்காகத் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பாரம்பரியமிக்க நெல் விதைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை இயற்கை விவசாய முறையில் சாகுபடிச் செய்து விதைகளாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்குவதென முடிவுச் செய்துள்ளோம். எங்களுடைய இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
 •  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பூங்கார், மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, பனங்காட்டு குறுவை, சிவப்பு கவுணி ஆகிய 5 வகையான பாரம்பரியமிக்க நெல் விதைகள் இயற்கை விவசாயத்தை மட்டுமே பின்பற்றி சாகுபடிச் செய்யப்பட்டு வருகிறது.
 •  புதுக்கோட்டை மாவட்டம் மருதாந்தளை, வாகைப்பட்டி, மாணிக்கம்பட்டி, வடசேரிப்பட்டி, மேலூர், கீழமுத்துடையான்பட்டி, மேல முத்துடையான்பட்டி, முத்துக்காடு, சுந்தரக்காடு, மேலப்பளுவஞ்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 விவசாயிகள் கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலத்தில் இவற்றை சாகுபடிச் செய்து மகசூலில் சாதனைப் படைத்துள்ளனர்.
 • இதன்மூலம் 300 மூட்டை நெல் ரகங்கள் கிடைத்துள்ளது.
 • இவற்றை தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு விதையாக விற்பனைச் செய்து பரவலாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளது.
 • இவை தவிரச் செம்புளிச்சம்பா, சூரக்குறுவை, இலுப்பைப்பூ சம்பா, சண்டிகார், கருத்தக்கார் ஆகிய 6 வகையான பாரம்பரியமிக்க நெல் ரகங்களும் விரைவில் பரவலாக்கம் செய்யப்படும்.
 •  பாரம்பரிய நெல் விதைகளைப் பொறுத்தமட்டில் வறட்சி மற்றும் வெள்ளத்தைத் தாங்கி வளரும் தன்மையுடையது.
 •  குறைந்தச் செலவில் அதிக மகசூல் கிடைக்கும். நேரடி விதைப்பு மற்றும் நடவுக்கு உகந்தது.
 •  மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். உயரமாக வளரும் ஆற்றல் படைத்தது என்பதால் கால்நடைகளுக்கு தீவன(வைக்கோல்) தட்டுப்பாடு இருக்காது.
 • நாம் தற்போது பயன்படுத்திவரும் அரிசி ரகங்களை விட பல மடங்கு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து மிக்கது என்பதால் இவற்றை சமைத்து உண்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.
 •  எதிர்கால நம் சந்ததியினர் உடல் ஆரோக்கியத்துடன் நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என விரும்பினால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய விவசாயிகள் அனைவரும் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Recommended Posts

யார் இந்த நம்மாழ்வார்?

தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு...

Read Article
விவசாய புரட்சி பற்றிய தகவல்கள்

இன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம்....

Read Article
நம்மாழ்வார் சொன்ன விஷயங்கள்!

நோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக்...

Read Article
பூச்சி மருந்துகளால் பேராபத்து

பயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை...

Read Article
விவசாயிகளுக்கு எதிராக அரசு

“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை...

Read Article
இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள்

ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர்...

Read Article
இந்திய மண்ணுக்கேற்ற விவசாயம்

ஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு...

Read Article
இயற்கை விவசாயமே…

இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத்...

Read Article
நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்?

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை...

Read Article

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
December 2017
M T W T F S S
« Jan   Jan »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Tags Cloud
азартного бренда букмекерской конторы делать ставки официального сайта இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES