Login

Register

Login

Register

விவசாயிகளுக்கு எதிராக அரசு

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

விவசாயிகளுக்கு எதிராக அரசு

“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு வேளாண் மன்ற சட்டம் குறித்தக் கருத்தரங்கம் திருச்சியில் நேற்று நடந்தது. ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வரவேற்றார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் மன்றச்சட்டத்தை நிரந்தரமாக தமிழக அரசு கைவிடவேண்டும். வேளாண்மையும், வேளாண் குறித்த ஆராய்ச்சி மற்றும் கல்வி அறிவையும் பன்னாட்டு மற்றும் வேளாண் தொழில் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் கொண்டு வரவே வேளாண் மன்றம் பயன்படும். விவசாயிகளுக்கு விதை மற்றும் வேளாண் உறவில் உள்ள உரிமை, அறிவு பகிர்வை இச்சட்டம் முடக்கிறது.

  •  ஒட்டு மொத்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மனித வளங்களை, இயற்கை வளங்களை உறிஞ்சுவதற்குத் தமிழக அரசைப் பயன்படுத்துகின்றன. அதன் விளைவாகவே அரசு இச்சட்டத்தை முன்வைக்கிறது.
  •  வேளாண் பல்கலையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் 90 சதவீதம் மரபணு, மாற்றுத் தொழில்நுட்பம் போன்றவை, பன்னாட்டு நிறுவனங்களில் லாபத்துக்காக அவர்களின் நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது.
  •  ‘வேளாண் மன்றச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வரக்கூடாது’ என்பதற்காக மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டமும், கலெக்டர்களிடம் மனுவும் வழங்கப்படும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  •  அதைத்தொடர்ந்து நம்மாழ்வார் நிருபர்களிடம் கூறியதாவது : வேளாண் மன்றச்சட்டத்தில் விவசாயி என்று ஓர் இடத்தில் கூட வார்த்தை இல்லாத நிலையில், வேளாண் பட்டதாரி அல்லாதோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினால், சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கலாம் எனவும், இச்சட்டத்தை எதிர்த்து யாரும் நீதிமன்றத்துக்குச் செல்லக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
  •  இரு ஆண்டாக தற்கொலைச் செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Recommended Posts

யார் இந்த நம்மாழ்வார்?

தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு...

Read Article
விவசாய புரட்சி பற்றிய தகவல்கள்

இன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம்....

Read Article
நம்மாழ்வார் சொன்ன விஷயங்கள்!

நோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக்...

Read Article
பூச்சி மருந்துகளால் பேராபத்து

பயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை...

Read Article
இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்

அதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும்...

Read Article
இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள்

ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர்...

Read Article
இந்திய மண்ணுக்கேற்ற விவசாயம்

ஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு...

Read Article
இயற்கை விவசாயமே…

இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத்...

Read Article
நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்?

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை...

Read Article

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
December 2017
M T W T F S S
    Jan »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Tags Cloud
அருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கம்பு/PEARL MILLET/KAMBU கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு தினை அரிசி/FOXTAIL MILLET/THINAI ARISI துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES