Posted by admin
- Dec 11, 2017
- 452
- 0
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர் தின விழா கிரியேட் அறக்கட்டளைச் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. கிரியேட் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வரவேற்றார். விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே தற்போது அதிகரித்து வருகிறது. பருவகால மாறுபாடுகள் காரணமாக வறட்சியாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். கடனை திருப்பி அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் பாரம்பரிய நெல் ரகங்கள் 63 வகைகள் உள்ளன.
- இவற்றிற்கு அதிக விலைக்கு வாங்கி ரசாயன உரங்களைப்போட வேண்டியதில்லை. ஒருமுறை களை எடுத்தாலே போதும்.
- வெள்ளத்தையும், வறட்சியையும் தாக்குப்பிடிக்கும் விவசாயமே இயற்கை விவசாயம். மாடுகளுக்கும் வைக்கோல் அதிகமாகக் கிடைக்கும். மகசூலும் அதிகமாகக் கிடைக்கும்.
- இயற்கை விவசாயத்தில் பயிர்களை நடுவதற்கு முன்பாக அந்த நிலத்தில் ஆடு, மாடுகளை இரவு நேரங்களில் தங்க வைத்தாலே மிக அதிகமான விளைச்சல் கிடைக்கும்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலிக்கருவை மரங்கள் அதிகமாக வளர்ந்து நிலத்தில் இருக்கும் தண்ணீர் அனைத்தையும் உறிஞ்சி விடுகிறது.
- இதனால் விவசாயத்திற்குப் போதுமான தண்ணீர் இல்லாமல் போய் விடுகிறது. எனவே வேலிக்கருவை மரங்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கோ.நம்மாழ்வார்.
Tags:
Recommended Posts
- Dec 17, 2017
- 1774 read
தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு...
Read Article- Dec 16, 2017
- 1535 read
இன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம்....
Read Article- Dec 15, 2017
- 692 read
நோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக்...
Read Article- Dec 14, 2017
- 527 read
பயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை...
Read Article- Dec 13, 2017
- 1723 read
அதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும்...
Read Article- Dec 12, 2017
- 358 read
“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை...
Read Article- Dec 10, 2017
- 452 read
ஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு...
Read Article- Dec 9, 2017
- 778 read
இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத்...
Read Article- Dec 8, 2017
- 789 read
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை...
Read Article