ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர் தின விழா கிரியேட் அறக்கட்டளைச் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. கிரியேட் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வரவேற்றார். விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே தற்போது அதிகரித்து வருகிறது. பருவகால மாறுபாடுகள் காரணமாக வறட்சியாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். கடனை திருப்பி அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது....
Learn moreஅனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை – இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பப்பாளியை சாப்பிட்டால் நல்லது எனத் தெரியும். ஆனால் பப்பாளி விதையையும் உண்ணலாம் எனத் தெரியுமா? பப்பாளி விதைகள் பப்பாளியைவிட நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என நிறைய ஆய்வுகள் கூறுகின்றன. சிறிது கசப்பு சுவையுடன்தான் இருக்கும். ஆரோக்கியத்தை விரும்புவர்கள் அப்படியே பழத்தோடு சாப்பிடலாம். சுவையையும் கூட விரும்புவர்கள் விதைகளை மசித்து உப்புடனோ, வேறு உணவுகளுடனோ,...
Learn moreபனை,புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல....
Learn moreபசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக்கொடி படர்ந்திருக்கும். இதன் இலை எள்ளின் உருவத்தில் உருண்டு,திரண்டு, வெந்தயம் அளவில் பருமனாக இருக்கும். இலையும், கொடியும் சிவந்த நிறத்துடன் இருக்கும்.சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்ணலாம். இது தேகத்துக்கு நல்ல பலத்தை தரக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பசலைக்கீரையை சாப்பிட இளகி குணமாகும். பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு. சிறு பசலைக் கீரையின் பயன்கள்...
Learn moreகாசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள காசினி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் மேலோங்கும். காசினிக்கீரை இலை, வேரை பொடி பாணமாக்கி காபீ, தேனீருக்கு பதிலாக பருகலாம். காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. காசினிக் கீரையின் பயன்கள் : ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல்...
Learn moreஅகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக் கீரையை யாரும் எளிதில் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை, ஏனென்றால் அதில் கசப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. சுவை கசப்பாக இருந்தாலும் இதன் மருத்துவ நன்மைகளை பார்த்தால், இதனை பிடிக்காதவர்களுக்கு கூட வியப்பாகத்தான் இருக்கும். அகத்தி கீரையின் முக்கிய மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம். சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக கூறுகிறது. இம்மரத்தின் பல...
Learn moreதும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்; மாதவிலக்கைத் தூண்டும். தும்பை இலைச்சாறு, தலைவலி, வாதநோய் போன்றவற்றைக் குணமாக்கும். தும்பை பூ, தாகம், காய்ச்சல், கண்ணோய் போன்றவற்றிற்கு மருந்தாகும். தமிழகமெங்கும், கிராமங்களில் சாதாரணமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப்பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். கரும்பச்சை நிறமான இலைகள், நான்கு பக்கங்களைக் கொண்ட தண்டு, நடுவில் மஞ்சரித் தொகுப்பில் சுற்றி மலர்ந்துள்ள வெண்மையான,...
Learn moreவெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்களைத் தேற்றுவதற்கு இந்தக் கீரைப் பயன்படுகிறது. `தக்காரி’, `நத்தக்காரி’, `வாதமடக்கி’ என வேறு சில பெயர்களும் தழுதாழைக்கு உள்ளன. சித்த மருத்துவத்தில் வாத நோய்களைப் போக்கும் அருமருந்தாகத் தழுதாழை கொண்டாடப்படுகிறது. பக்கவாதம் முதலான 80 விதமான வாதநோய்களைப் போக்கும் என்கிறது சித்த மருத்துவம். தழுதாழையைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், `பாலவாதம்’ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால்...
Learn moreநொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை, உடல் அசதியைத் தணிக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; காய்ச்சலைப் போக்கும்; ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்; மாதவிலக்கை தூண்டும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். நொச்சி பூ குளிர்ச்சி உண்டாக்கும்; துவர்ப்புச் சுவையைத் தூண்டும். நொச்சி வேர், காய்ச்சலை கட்டுப்படுத்தும். கோழையை அகற்றும்; சிறுநீரைப் பெருக்கும். நொச்சி சிறு மரமாகவோ அல்லது குறுஞ்செடியாகவோ காணப்படும். நொச்சி இலைகள், கைவடிவமான 3 அல்லது 5 கூட்டிலைகளுடன் கூடியவை....
Learn moreகொள்ளு தோசை : கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தையும் ஊறவைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு கலந்து தோசையாக ஊற்றி எடுக்கவும். கடலை எண்ணெய் பயன்படுத்தலாம். மணமான கொள்ளு தோசை தயார். நீரிழிவு உள்ள நண்பர்களுக்கு ஏற்ற உணவு. கொள்ளு கீரை கூட்டு : கீரையை நன்கு சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொள்ளை ஊற வைக்கவும் கீரையுடன் ஊற வைத்த கொள்ளு, பாதி வெங்காயம், பச்சை...
Learn more
Login with