online poker with friends video Shanwei
stromectol resepti peremptorily ஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு தேவை என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் கூறினார். உலகம் முழுவதும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக நடுநிலை விஞ்ஞானிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மரபணு விதைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மேலைநாடுகளில் நிரூபிக்கப்பட்டப்பின்னரும், இங்குள்ள அமைச்சர்கள் வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர். ரசாயன மருந்துகள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் கோதுமை, நெல் உள்ளிட்டவை விஷமாகிவிட்டன. இதை உண்ணும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
- பஞ்சாப்-ராஜஸ்தான் இடையே கேன்சர் ரயில் என்ற பெயரில் ரயில் இயக்கப்படுகிறது. இதில் புற்றுநோயாளிகள் மட்டுமே சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம்தான் இப்போதைய தேவை.
- இந்தியாவில் 15,000 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்க நாடு உருவாகியே 300 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது.
- விவசாயத்தில் இத்தனை ஆண்டு அனுபவமிக்க இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்பது வெட்கமாக இல்லையா? கம்பு, எள், கேழ்விரகு, கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன.
- இவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமைக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம். விவசாயம் என்பது பொருளியல் சார்ந்தது அல்ல.
- குடலியல் சார்ந்தது என்பதை அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள் எண்ண வேண்டும் என்றார்.