Login

Register

Login

Register

மரசெக்கு எண்ணெய்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

மரசெக்கு எண்ணெய்


செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ, கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளைப் பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது மின்சாரம் அல்லது எரிப்பொருள் மூலம் இயக்கப்படுகிறது.
பழையக் கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துக்களை நசுக்கும்படியாக உலக்கைக் கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துக்களில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்.
செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க) சேர்த்து ஆட்டுவது வழக்கம். சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளைச் சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும். மரசெக்கில் கருபட்டியுடன் சேர்த்து எள்ளை ஆற்றும் பொழுது அவளவாக வெப்பம் ஏறாது.

அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்பமாக்கள் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இப்படி மர செக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மனமும் குணமும் இருப்பது இயற்கை. இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான்.

மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்குக் கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும். ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருடக் காலத்திற்குக் கெட்டு போகாமலும் இருக்கும். ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் அதன் ருசி காலக் காலத்திற்கும் மறக்காது.  இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் சமைக்கலாம்.

Recommended Posts

நல்லெண்ணை பயன்கள்

நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும், கொலஸ்டிராலைக் குறைக்கும் லெக்சிதின் என்ற பொருளும்...

Read Article
நிலக்கடலை எண்ணெய் பயன்கள்

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது....

Read Article
தேங்காய் எண்ணெய் பயன்கள்

வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வறுத்து எடுக்கிறது. சன்ஸ்கிரீன் லோசன் போடாமல் வெளியே எங்கேயும்...

Read Article

1 comments

  • admin
    December 5, 2017 11:05 am

    Very useful….

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
December 2017
M T W T F S S
    Jan »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031