Login

Register

Login

Register

நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்?

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்?

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை வேளாண்மையை மிக மிக எளிமையாக விளக்கும் அவருடைய உரைகள்தான். இயற்கை வேளாண்மையின் அடிப்படைகள் பற்றிய நம்மாழ்வாரின் பேச்சை, கோட்டோவியங்கள் நிரம்பிய காணொளித் தொகுப்பாக வரைந்து ஓவியர் ரஜினிபாபு காட்சிப்படுத்தியிருக்கிறார். பின்னணியில் நம்மாழ்வாரின் குரல் ஒலிக்க, அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் ஓவியமாக மாறும் அந்தக் காணொளி யூடியூப்பில் கிடைக்கிறது. நம்மாழ்வார் என்ன சொன்னார்?

என்னதான் பிரச்சினை? :
  •  எங்கெங்கயோ சுத்தி புல்லு, வைக்கோலு திங்கிற மாட்டுக்குள்ள விஷம் போயிருது. மாடு கொடுக்கிற பாலு விஷமாயிடுச்சு.
  •  பாலைக் குடிக்கிற பெண்கள் விஷமாயிட்டாங்க. பெண்ணு குழந்தை பெத்து பால் கொடுக்கும்போது, தாய்ப்பாலே விஷமாயிடுச்சு. இதைவிட மோசமான நிலைமையை உலகத்துல வேற எங்கயும் பார்க்க முடியாது.
  •  ஒரு தாய் தான் பெற்ற குழந்தைக்கே விஷத்தை கொடுக்கிறான்னு சொன்னா, இது உளரீதியாவும், உடல் ரீதியாவும் நாம மோசமான நிலையில இருக்கிறதைச் சொல்லுது. அப்ப, இதிலிருந்து விடுபடுவது எப்படி?.
பூமிக்குத் தேவை கழிவு :
  •  இயற்கையில் சில விதிகள் இருக்கு. அந்த இயற்கை விதிகள் நீங்க, நான் எல்லாம் பிறக்கிறதுக்கு முன்னாடியே இருந்தது. நாம செத்துப்போனதுக்கு அப்புறமும் அது இருக்கும். அந்த இயற்கை விதிகளை மட்டும் நாம தெரிஞ்சுக்கிட்டோம்னா போதும்.
  •  வயலுக்கு என்ன போடணும்னு ஒரு விவசாயி கிட்ட கேட்டா 40 விழுக்காடு நைட்ரஜன் போடணும், 20 பி போடணும், 20 கே போடணும்னு சொல்றாங்க. அந்த ரசாயனத்தைப் போடப் போட என்ன ஆகுதுன்னா, பூமியில இருக்கிற உயிரெல்லாம் செத்துப்போகுது.
  •  செத்துப் போகுதுன்னா இந்த மண்ணுல இருக்கிற உயிரை எல்லாம் வளர்க்கிறதுக்கு என்ன செய்யணும்? ரசாயனத்தைப் போடக் கூடாது. விஷத்தைப் போடக் கூடாது. போட்டா அது செத்துப்போயிடும். அதுக்குப் பதிலா அது கேட்கிறது, கழிவுகளைத்தான்.
  •  ஆட்டுப் புழுக்கையப் போடும் போது, மாட்டு சாணியப் போடும்போது, கோழிக் கழிவை போடும்போது, இந்த இலை தழைகளை வெச்சு சாணித் தண்ணியத் தெளிச்சு கம்போஸ்ட் ஆக்கி மண்ணுல போடும்போது நாம என்ன செய்யிறோம்?
  • நுண்ணுயிர்களுக்கு சாப்பாடு தர்றோம். பூமிக் கழிவுகளை மட்டும்தான் கேட்கும். ஆகையினால நாம கழிவுகளை மட்டும் பூமிக்குத் திருப்பித் தர பழகிட்டோம்ணா, பூமி நமக்கு நல்லபடியாத் திருப்பிக் கொடுத்துக்கிட்டே இருக்கும்.
வேருக்கு உணவு தரும் இலை :
  •  ‘அக்ரிகல்சர் இஸ் ஹார்வெஸ்டிங் தி சோலார் எனர்ஜி’. இந்த சூரிய வெளிச்சத்தை அதிகபட்சமா, நாம எப்படி அறுவடை செய்யப்போறோம்? அதுதான் இங்கே தேவை. ரெண்டாவது என்னன்னா, அதுக்குத் துணையா நாம செய்ய வேண்டியது ‘ஃபீடிங் தி பாக்டீரியா’. ‘ஃபோட்டோசிந்தசிஸ்’னு ஒன்னு இருக்கு.
  •  சூரியன்ல இருந்து வர வெளிச்சத்தைப் பச்சை இலை வாங்கி, அதை சர்க்கரையா மாத்திடுது. அது சர்க்கரையைத் தின்னுட்டு, மிச்சத்தை வேருக்கு அனுப்பிடுது. அந்த வேரு எல்லா இடத்துலயும் பரவலா ஓடி பூமியில் இருக்கிற தண்ணிய எடுத்து, மறுபடியும் பச்சை இலைக்கு அனுப்புது.
  •  இலை, வேருக்கு சாப்பாடு போடுதே ஒழிய, வேர் இலைக்கு சாப்பாடு போடலை. அதனால வேர் மூலமா இலைக்குச் சாப்பாடு கொடுக்கிறேன்னு சொன்னா, அது சயின்ஸ் இல்ல. முதல்ல இதை முடிவு பண்ணிட்டீங்கன்னா யாரை வேணும்னாலும் நாம திருப்திப்படுத்தலாம்.
நுண்ணுயிர் தரும் உரம் :
  •  அப்ப நாம ஆட்டுப் புளுக்கை, மாட்டுச் சாணிய மண்ணுல போடுறோமே, அப்ப அது என்ன? அது என்னன்னா, மண்ணுல இருக்குற நுண்ணுயிரிங்கதாங்க. இன்னைக்கு, அதை நிறைய பாக்கெட்டுல எல்லாம் போட்டு விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம்.
  • அசோஸ்பயிரில்லம்கிறோம், ரைசோபியோம்கிறோம், பாஸ்போபாக்டீரியம்கிறோம், சூடோமோனாசுங்கிறோம். அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள்.
  • இந்த கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் காத்துல இருக்கிற நைட்ரஜனை எடுத்து செடிக்கு விநியோகம் பண்ணுது.
  •  பூமியில உறைஞ்சு கிடக்கிற பாஸ்பரஸை இளக்கி விநியோகம் பண்ணுது. அந்த பூமியில இருக்கிற ஒவ்வொரு பொருளையும் பொட்டாஷா மாத்தி, விநியோகம் பண்ணுது. நீங்க எதை எதையெல்லாம் கடையில இருந்து வாங்கியாந்து போடணும்னு நினைக்கிறீங்களோ, அது எதையும் வாங்கியாந்து போட வேண்டிய அவசியமே கிடையாது. அவ்வளவையும் பூமியில இருக்கிற நுண்ணுயிரிங்க செய்யுது.
பூமியை பாதுகாக்க… :
  • அப்ப பூமியோட வளத்தைப் பாதுகாக்கிறதுக்கு மூணு இருக்கணும். ஒண்ணு ‘ஃபிசிக்கல் ப்ராபர்ட்டி ஆஃப் தி சாயில்’. நிலம் போல பொலன்னு இருக்கணும்.
  •  ரெண்டாவது, ‘பயலாஜிக்கல் ப்ராபர்ட்டி ஆஃப் தி சாயில்’. அதுல உயிரினங்கள் இருக்கணும். நுண்ணியிரிங்க இருக்கணும், மண் புழு இருக்கணும், பூரான் இருக்கணும், தவளை இருக்கணும், நண்டு இருக்கணும்.
  •  மூணாவது, இவைகளெல்லாம் வேலை செஞ்சுதுன்னா, செடிக்கு வேணுங்கிற எல்லா ரசாயனமும் மண்ணுக்கு வந்துரும். அதுக்குப் பேரு ‘கெமிக்கல் ப்ராபர்ட்டீஸ்’. ஃபிசிக்கல் ப்ராபர்ட்டி, பயலாஜிக்கல் ப்ராபர்ட்டி, கெமிக்கல் ப்ராபர்ட்டி மூணும் சேர்ந்தாத்தான் நிலவளம். அந்த நிலம்தான் செடிகளை வளர்த்து நமக்கு வேணும்கிறதை எல்லாம் வாரி வாரிக் கொடுக்குது”.

Recommended Posts

யார் இந்த நம்மாழ்வார்?

தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு...

Read Article
விவசாய புரட்சி பற்றிய தகவல்கள்

இன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம்....

Read Article
நம்மாழ்வார் சொன்ன விஷயங்கள்!

நோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக்...

Read Article
பூச்சி மருந்துகளால் பேராபத்து

பயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை...

Read Article
இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்

அதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும்...

Read Article
விவசாயிகளுக்கு எதிராக அரசு

“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை...

Read Article
இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள்

ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர்...

Read Article
இந்திய மண்ணுக்கேற்ற விவசாயம்

ஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு...

Read Article
இயற்கை விவசாயமே…

இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத்...

Read Article

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
December 2017
M T W T F S S
    Jan »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031