Login

Register

Login

Register

தேங்காய் எண்ணெய் பயன்கள்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

தேங்காய் எண்ணெய் பயன்கள்

வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வறுத்து எடுக்கிறது. சன்ஸ்கிரீன் லோசன் போடாமல் வெளியே எங்கேயும் போகமுடியாது.புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பதம் பார்த்துவிடும். எனவே அதிக காசு செலவில்லாமல் வீட்டிலே சன் ஸ்கிரீன் லோசன் தயாரித்து உபயோகித்தால் சருமம் சேதாரமில்லாமல் தப்பிக்கலாம். தேங்காய் எண்ணெய் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு ஈடு இணையில்லை. வெளியே கிளம்புவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக லைட்டாக தேங்காய் எண்ணெயை சருமத்தில் பூசுங்கள். சருமம் பாதிக்கப்படாது. இது சிறந்த சன்ஸ்கிரீன் லோசன்.சருமம் மென்மையடைவதோடு வெயிலில் கருப்பதை தடுக்கும்.

சரும பாதுகாப்பு:
 • தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது.சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது.
 • இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை.
 • சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.
வறண்ட தலை பகுதிக்கு:
 • தலையை பாதுகாக்கும். தலைக்கு ரசாயனம் கலந்த கண்ட எண்ணெயை பூசுவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
 • இதனால் தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும். மேலும், குளிப்பதற்கு முன்பும் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம்.
கூந்தல் பாதுகாப்பு:
 • கூந்தலை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு நிகர் எதுவுமில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச் சத்து காணப்படுகிறது.
 •  இந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் ஊறவைத்து குளிப்பதன் மூலம் கூந்தலின் வேர்க்கால்கள் பலமடையும், பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.
மன அழுத்தத்திற்கு:
 •  மன அழுத்தம் நீக்கும். பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இதனால் முகமானது களை இழந்து காணப்படும்.
 • தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது.
 • தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும். தோல் நோய்கள் நீக்கும்.
தோல் பாதுகாப்பு:
 •  தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுமல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது.
 •  ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில் மற்றும் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் நீங்குகிறது.
முகம் அழகிற்கு:
 • ஒப்பனை(makeup) செய்யும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு        படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
 •  கேரள மாநிலத்தில் இன்றைக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது. மேனிக்கு உபயோகப்படுத்துவதோடு அன்றாட சமையலுக்கும் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதே அவர்களின் ரகசியமாகவும் உள்ளது.

Recommended Posts

மரசெக்கு எண்ணெய்

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு...

Read Article
நல்லெண்ணை பயன்கள்

நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும், கொலஸ்டிராலைக் குறைக்கும் லெக்சிதின் என்ற பொருளும்...

Read Article
நிலக்கடலை எண்ணெய் பயன்கள்

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது....

Read Article

1 comments

 • admin
  December 7, 2017 10:23 am

  h

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
December 2017
M T W T F S S
    Jan »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031